திவுலப்பிட்டியவில் டெங்கு பரவும் ஆபத்து



ஐ. ஏ. காதிர் கான்-
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, திவுலப்பிட்டிய பிரதேசத்திலும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக, திவுலப்பிட்டிய பொது சுகாதாரப் பரிசோதகர் அருண ரந்தெனிய தெரிவித்தார்.
திவுலப்பிட்டிய சுகாதார சேவைப் பிரிவில் தற்போது டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறு கவனயீனமாக இருப்பவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலேயே டெங்கு நுளம்புகள் உருவாகுவதற்கான டெங்குக் குடம்பிகள் இருக்கின்றனவா? என்பன தொடர்பில், நாள்தோறும் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :