நபிகளாரின் பெருமை போற்றும் மீலாத் விழா..



காத்தான்குடி செய்தியாளர்-
காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரம் மற்றும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மீலாத் விழா நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஏ.ஆதம்லெப்பை (பலாஹி) பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷேய்ஹ் ஏ.எம்.ஹாறூன் (ரஷாதி) கெளரவ அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மாணவர்களின் நிகழ்வுகள் மற்றும் கலைஞர்கள் இஸ்லாமிய பாடல்கள் என நிகழ்வை அலங்கரித்ததுடன் அறிவிப்பாளர்கள் போரத்தின் மார்க்க ஆலோசகர் அஷ்ஷேய்க எம்.ஐ.எம்.மசூத் அஹ்மத் (ஹாஷிமி) அவர்களின் நபிகளாரின் போதனைகள் மற்றும் வாழ்க்கை திட்டங்கள் தொடர்பிலான சிறப்புரையும் இடம்பெற்து..

அத்துடன் மாணவர்கள், உறுப்பினர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்கள், கலாசார உத்தியோகத்தர்கள்,கல்வியியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள்,மாணவர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்ட அதேவேளை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :