இது பற்றி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு அனுப்பியுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஊடகங்களுக்கு பேசும் போது கல்முனை உப செயலகம் சம்பந்தமாக எவ்வளவோ கூத்து காட்டினோம். இதனை ஒரே இரவில் தரமுயர்த்த அரசாங்கம் தயார். ஆனாலும் அதனை தடுப்பது முஸ்லிம் காங்கிரசே என கூறியுள்ளார். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்துள்ளமை சரியானது என கூற வருகிறார்.
எம்மை பொறுத்த வரை கல்முனையின் இந்த பிரச்சினையை பிச்சைக்காரனின் புண் போல் வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரசும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்கிறார்கள். இவ்விரு தரப்பாரும் இணக்கத்துக்கு வந்து எப்போதோ இப்பிரச்சினையை தீர்த்திருக்கலாம். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தி தேர்தல் காலத்தில் தமது அரசியலை முன்னெடுக்கவே இதனை தீர்க்கும் முயற்சிக்கு முன் வராமல் இரு தரப்பும் உள்ளது.
இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் அரசியல்வாதிகளும் ரகசியமாக பேசி முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரசும் தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளும் உசுப்பேற்றி உசார் மடையர்களாக்குவதாகவே சந்தேகிக்கிறோம்.
இப்படி பேசும் படி மு. காங்கிரஸ் வியாழேந்திரனை ஆர்வமூட்டியதா என்றும் தெரியவில்லை.
உண்மையில் எமது கட்சியும் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்ற அரசுக்கு ஆதரவானோரும் முயன்றால் இப்பிரச்சினையை தீர்க்க முடியும்.
கல்முனையை இனரீதியாக பிரிக்காமல், கல்முனையில் ஒரேயொரு தமிழ் மொழி செயலகம் இருக்கும் நிலையில் உப செயலகத்தை ரத்து செய்து, வெஸ்லி பாடசாலை தொடக்கம் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து தனியான பாண்டிருப்பு செயலகம் அமைய ராஜாங்க அமைச்சர் உடன் படுவாராயின் நிச்சயம் இதை கல்முனை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் விரும்புவர் என்பதால் இதை உடனடியாக அரசிடம் கொண்டு சென்று தீர்க்க முடியும்.
இப்படியான ஒரு பிரேரணையை எமது கட்சி கவுரவ பெசில் ராஜபக்ஷவிடம் முன் வைத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
அப்படி இல்லாவிட்டால் 2014ம் ஆண்டு கல்முனையை நான்காக பிரித்து அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமாணி அறிவித்தலை மீண்டும் வெளியிடச்செய்ய வியாழேந்திரன் முயற்சிக்க வேண்டும்.
இவற்றை செய்ய ராஜாங்க அமைச்சர் முன் வராவிட்டால் தேர்தல் வரும் போது இப்பிரச்சினை முஸ்லிம் காங்கிரசுக்கும் கருணா போன்ற இனவாத அரசியல்வாதிகளுக்குமே சாதகமாக அமையும்.
ஆகவே கல்முனை பிரச்சினையை வைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தாமல் நாம் சொல்லும் தீர்வுத்திட்டத்தை ஏற்று பிரச்சினையை தீர்த்து தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.
0 comments :
Post a Comment