அ.வா:. முஹ்சீன் எழுதிய ”அசன்பே யுடைய கதை ஓர் மீள் வாசிப்பு” நூல் வெளியீட்டு வைபவம்



அ.வா:. முஹ்சீன் எழுதிய ”அசன்பே யுடைய கதை ஓர் மீள் வாசிப்பு” நூல் வெளியீட்டு வைபவம் வெள்ளாப்பு வெளி ஏற்பாட்டிலும், ACS Medical Services நிறுவனத்தின் அனுசரணையுடனும் ஒக்டோபர் 31ந்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 12.00 வரை கொழும்பு-14,- லயர்ஸ்புரோட்வே (Layard's Broadway )வீதி , இல, 243, இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ACS மெடிகல் சேர்விஸஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

"கலாபூஷணம்" தாசிம் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெறும்,இவ்விழாவில் பேராசிரியர். ஏ. ஹுசைன்மியா பிரதம அதிதியாக கலந்து கொள்வார்., நூலின் முதற்பிரதியை "புரவலர்" அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்று கொள்வார்.

கௌரவ அதிதியாக : "கலாபூஷணம்" ரஷீட் எம். இம்தியாஸ் கலந்து கொள்வார். நூல் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்த நூல் அறிமுகவுரையை மேமன் கவி நிகழ்த்துவார். . நூலாய்வுயை கவிஞர்
எஸ். முரளிதரன் முன் வைப்பார்.

சிறப்புப் பிரதிகளை K.M. சலீம் (SLACS ) Dr. முஸ்தாக் அஹமட், சுஹைதா ஏ. கரீம் ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள்,ஏற்புரையை நூலாசிரியர் அ.வா, முஹ்சீன் நிகழ்த்துவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :