மலையகப்பிரதேசம் சீரற்றக்காலநிலை நிலவும் ஒரு பிரதேசம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அத்தோடு மலையகத்தின் அமைவிடம் ஆனது உயர், தாழ் பிரதேசமாக காணப்படுதாலும் மலையகப்பிரதேசத்தில் இந்த online வகுப்புகள் இன்றும் ஒரு சவாலாகவே உள்ளதும்.
Online வகுப்புகள் எனப்படும் புதிய Digital கல்வி முறை தற்போது covid-19 ஊரடங்கு காரணமாக தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை இணையத்தின் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இணையத்தின் வாயிலாக முன்னெடுக்கும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் சகல மாணவர்களும் இந்த கல்வி செயற்பாடுகளில் பங்கெடுக்க முடியுமா? என்றால் அது ஒரு கேள்விக்குறியான விடயம் தான். அதற்கு காரணம் அந்த மாணவர்களின் குடும்ப சூழல் அவர்கள் வாழும் சூழல் கட்டமைப்புகளை கூற முடியும்.மலையகத்தை பொருத்தவரை காலநிலை மாற்றம், மக்களின் குடும்ப சூழ்நிலை போன்றவை மலையக மாணவர்களின் கல்வியில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது என்றே கூற வேண்டும்.
இங்கு வாழும் மக்களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி online கற்றல் என்பது ஒரு சவாலாகவே உள்ளது. பள்ளிக்கு சென்று மட்டுமே படித்து கொண்டிருந்த மாணவர்களுக்கு, இது எப்படி இருக்கிறது. அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி இருக்கிறது? மற்றும் இதை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ற பல்வேறு மாறுபட்ட கண்ணோட்டங்களில் இதை நாம் அணுக வேண்டி உள்ளது. நமக்கு இந்த Online வகுப்புகள் புதுமையானதாகவும், வித்தியாசமான அனுபவமாக இருப்பதால் இதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.
குடும்ப சூழ்நிலையில் பார்க்கும் போது சில மாணவர்களின் வீடுகளில் இந்த இணைய வழிக் கல்வி கற்பதற்கான கணனி, தொலைபேசி வசதிகள் காணப்படாமையால் சில கஷ்டமான பின்னணியைக் கொண்ட குடும்ப மாணவர்களால் அந்த இணைய வழி கல்வியை கற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
சில பகுதிகளில் கணினி, தொலைபேசி வசதிகள் இருந்தாலும் இதன் ஊடாக கற்பதற்கான சீரான வலையமைப்பு வாய்ப்பு இல்லாத பாரிய பிரச்சினைகள் காணப்படுவதால் பசறையின் மடுல்சீமை, ரோபேரி, மெதவலகமை ,பிட்டமாருவை ,வேரகொட ,லுனுகலை போன்ற பிரதேசங்களில் சில பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் வலையமைப்பை தேடி உயந்த மலைப்பகுதிகளுக்கு செல்லவதையும் மரங்களின் மேல் பரல்கள் அமைத்து அதன்மேல் ஏறி இருந்து இணைய வலையமைப்பை தேடி கற்கும் அசாதாரண சூழ்நிலையில் அவர்கள் இணைய கல்வி செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என்பதையும் நாம் அனைவரும் செய்திகளிலும் பத்திரிக்கைகளிலும் அறிந்த ஒரு விடயமாகவும் உள்ளது.
அதேபோன்று தாம் இணைய வலையமைப்பை தேடி செல்லும் அந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் போன்றவற்றையும் அவர்களது பெற்றோர்களும் மலையக செய்தி வழங்குணர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பகுதிகளில் விரைவாக மாணவர்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு வலையமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசாங்கம் முன் வருமா? என்று அந்த பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
இவை மாத்திரமன்றி online வகுப்புகள் நடைபெறும் zoom ,Google class room போன்றவற்றை தமது தேவைக்கு ஏற்ப கையாள்வதிலும் பல சிக்கல்கள் உள்ளது. அதற்கு காரணம் முன்னனுபவம் இன்மையும் முன்னோர்களின் வழிகாட்டல் இன்மையுமே ஆகும்.
அத்தோடு நகர்ப்புற மாணவர்கள் கல்வி முறையானது இலகுவானதாகும் ஏற்றதாகவும் காணப்படும் அதேசமயம் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இது பெரும் சவாலாகவே அமைந்துள்ளது எனவே கூற வேண்டும். அதுவும் மலையகத்தை பொறுத்தவரையில் இங்குள்ள மாணவர்களுக்கு இக்கல்வி முறையானது ஏற்ற ஒன்றாக கூறிவிட முடியாது. பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இணையவழி கல்வி முறையானது பெரும் இடையூறாகவே உள்ளது. வகுப்பு நடைபெறும் சரியான நேரத்தில் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத நிலையும் உள்ளது. இதற்கு காரணம் வீடுகளில், வீட்டை அண்டிய இடங்களில் coverage இன்மை ஆகும். இதனால் பிள்ளைகள் தொலை தூரத்திற்கு சென்று இணைய வழிக் கல்வியில் ஈடுபடும் நிலையும் அதிகமாகவே மலையகப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
இதன் காரணமாக மாணவர்களிடையே பள்ளி, கல்வி, தேர்வு மீது பயம், பதட்டம் உள்ள மாணவர்களுக்கு இந்த புதிய கல்வி முறையானது அவர்களின் அச்சத்தை அதிகரிக்கிறது. இதனால் இவர்களுடைய படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைதல், தன்னம்பிக்கையின்மை, போன்றவை பாதிக்கப்படுகிறது. வெகு நாட்களாக சமூக பங்களிப்பு இல்லாமல் ஒரே அறையில் அமர்ந்திருப்பது நண்பர்கள், ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லாததால் தனிமை உணர்வு, எரிச்சல் உணர்வு, சுய உந்துதல் நாளடைவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த Online கல்வி முறை என்பது நமக்கு தற்போது தான் அறிமுகமாகி உள்ளது. என்பதாலும் இதன் பயன்களை இன்னும் முழுமையாக அனுமதிக்காத நிலையில் இதன் பாதகங்கள் சற்று அதிகமாகவே தற்போது காணப்படுகின்றது அதற்கு முக்கியகாரணம் இணையவழி வகுப்புகள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதில் சில தடைகள், மற்றும் சிக்கல்கள் உள்ளது.
ஆனால் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் தாண்டி கல்வியில் சாதித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் முயற்சியுடனும் தொடர்கிறது மலையக மாணவர்களின் கல்வி.
ரமேஷ் ரெஜினா
ஊடக கற்கை துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
0 comments :
Post a Comment