கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் காணியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பங்கேற்பு



எம்.ஏ.முகமட்-
சுபீட்சத்தின் நோக்கு கிராமத்திற்கு கிராமம் காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (28) இடம் பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அண்ணல் நகர்,பைசல் நகர் மற்றும் மகரூப் நகரைச் சேர்ந்த 70 பேருக்கு முதற் கட்டமாக இக்காணி உறுதிப் பத்திரத்தை காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரல,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எஸ்.ஸல்மானுல் சப்ரி,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.எம்.எஸ்.தௌபீக்,கிண்ணியா பிரதேச செயலாளர்.எம்.ஏ.அனஸ்,உதவிப் பிரதேச செயலாளர் ஜே.பஹிமா,உதவி திட்டமிடல் பணிப்பாளர்.ஐ.முஜீப்,காணி சீர் திருத்த ஆணைக் குழுவின் தலைவர் நிலந்த விஜயசிங்க,காணி சீர் திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமாரன் விமலராஜ்,பொதுஜன பெரமுன இணைப்பாளர்களான காமினி மற்றும் எம்.எஸ். உவைஸ் ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கியதோடு,பொது ஜன பெரமுன மூதூர் தொகுதி இணைப்பாளர் ஐ.சதாத்,பிரதேச சபை தவிசாளர் ரத்நாயக்க உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

30 வருடத்திற்கு மேலாக காணி சீர்திருத்த ஆணைக் குழு காணியில் குடியிருந்தவர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :