எல்லவல நீர் வீழ்ச்சிக்கு செல்வதற்கு தற்காலிகத் தடை



மினுவாங்கொடை நிருபர்-
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர் வீழ்ச்சியை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு, வெல்லவாய பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
குறித்த நீர் வீழ்ச்சியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர், கடந்த காலங்களில் குறித்த நீர் வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாலேயே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, இந்த நீர் வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை குறிப்பிட்டுள்ளது.
வெல்லவாய பிரதேசத்தில், அனைவரையும் கவர்ந்த குறித்த நீர் வீழ்ச்சியைப் பார்வையிட, பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தந்தாலும், அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக, நேற்று முன்தினம் (20) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், அந் நீர் வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :