சாந்தியும் சமாதானமும், சகோதரத்துவமும் நிறைந்த மீலாத் தினமாக அமையட்டும்.!எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



மூக சகவாழ்வின் மகிமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும், இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே காணப்படுகின்ற பிணைப்பை அலங்கரிக்கின்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூறுகின்ற இன்றைய தினம் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்-அமீன் அல்லது நம்பிக்கையாளர் என்றும் அழைக்கப்படும் நபிகள் நாயகத்தின் பரஸ்பர புரிந்துணர்வு, சகோதரத்துவம், ஏனையோர்களுக்கு உதவி செய்தல் மற்றும் அடிப்படைப் போதனைகள் மூலம் நீதி, நியாயத்தை முழுமைப்படுத்தினார். நபிகள் நாயகத்தின் முதன்மைக் கோட்பாடானது மனித சமுதாயத்தை நல்லொழுக்கத்திலும், சகோதரத்துவத்திலும், அகிம்சையிலும், அறிவிலும் பூரணமடைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும்.
நபிகள் நாயகத்திடம் காணப்பட்ட விசேட அம்சங்களின் அடிப்படையில் ஏனையோர்களுக்கிடையே விசேடமான ஒருவராக அடையாளம் காணட்டார் என்பதுடன் அவரது நாற்தாவது வயதில் அல்லாஹ்வின் தூதராகி இஸ்லாம் மார்க்கத்தை உலகெங்கும் பரப்பினார்.
பின்னர் இறைவனிடமிருந்து 23 ஆண்டுகளாக அவ்வப்போது வந்த தூதுகளின் அடிப்படையில் அரேபிய சமூகத்தை சரியான திசையில் வழிநடத்தினார்.
உலகில் வாழ்கின்ற மனிதர்களில் ஐவரில் ஒருவர் நம்பிக்கை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தை நடைமுறையாக்கி முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் நபிகள் நாயகமாவார்.

உலகின் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் நபிகளாரின் பார்வை ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் வழிகாட்டுதலுக்கு வழிவகுக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாற்றிய நபிகள் நாயகம் அவர்கள் அல்லாஹ்வின் தூதை உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிதலை வலியுறுத்திய நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்..





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :