சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க போரோட்டத்தில் இறங்கினர்.
நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றன. மலையகத்திலும் நுவரெலியா, பூண்டுலோயா, அட்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்களின் போராட்டங்கள் இடம்பெற்றன.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை எனவும், பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் தீர்வு அவசியம் எனவும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
0 comments :
Post a Comment