எத்தகைய தடைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும்.அமைச்சர் ஜோன்ஸ்டன்



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

நாய்கள் எவ்வளவு தான் குரைத்தாலும் 'தவலம்' முன்னோக்கிச் செல்லும் என்று ஊர்களில் சொல்வார்கள் எத்தகைய தடைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும்.
- எமது அரசாங்கம் மிகவும் அமைதியான அரசாங்கம், எமது ஜனாதிபதியும் அமைதியான தலைவர் - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

துறைமுக அமைச்சருடன் இணைந்து கோபுரத்தின் மேல் செல்லும் துறைமுக பிரவேச அதிவேக நெடுஞ்சாலை பணியில் ஈடுபடுவது தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முன் பொருத்தப்பட்டகொங்கிரீட் பால பாகங்கள் பொருத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் சுபநேரத்தில் இதைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் ரோஹிதவை அழைத்து இதனை ஆரம்பிக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் இந்த புதிய தொழில்நுட்ப பயன்பாட்டுடன் இலங்கை பொறியியலாளர்களின் அறிவும் உயரும் என்று நான் நம்புகிறேன்.இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், திட்டப் பணிப்பாளர் மற்றும் செயலாளர் இது தொடர்பில் தெரிவித்தார்கள்.
2014 இல் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் துறைமுக நெடுஞ்சாலை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சு நடத்தி இந்தத் திட்டம் முடிவு செய்யப்பட்டது. 2015 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்காவிட்டால் இந்த அதிவேக நெடுஞ்சாலையை இந்த நாட்டில் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பர். ஏற்றுமதி இறக்குமதிக்கு மட்டுமன்றி ஹம்பாந்தொட்டையில் ஏறினால் காலிமுகத்திடலுக்கு அருகில் இறங்கக் கூடிய யுகத்தை தான் நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்ததால் மக்களுக்கு இழக்க நேரிட்டது. நல்லாட்சி யுகத்தில் நாங்கள் ஓரளவு பின்னோக்கி செல்ல நேரிட்டது. குரோதம் , பொறாமை காரணமாக மஹிந்த ராஜபக்‌ஷ ஆரம்பித்த திட்டங்களை நல்லாட்சி அரசு நிறுத்தியது. அவ்வாறு நடந்திருக்காவிட்டால் துறைமுக நகரம் திறக்கப்பட்டிருக்கும். இன்று பசளை விவகாரத்தை விமர்சிப்பது போன்று அன்று துறைமுக நகர திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்கள். இலங்கையில் உள்ள கருங்கற்கள் அனைத்தையும் இட்டாலும் துறைமுக நகரை நிரப்ப முடியாது என்று திசானாயக்க கணக்கிட்டு கூறியிருந்தார். அப்படிக் கூறி துறைமுக நகர திட்டம் நிறுத்தப்பட்டது. மேலதிகமாக ஏக்கர் கணக்கில் காணியை வழங்கி அந்த திட்டத்தை மீள ஆரம்பித்தார்கள்.

இந்த திட்டத்தை நிறைவு செய்யும் போது துறைமுக பிரவேச அதிவேக நெடுஞ்சாலை மேலால் மாத்திரமன்றி நிலத்தாலும் 4 வழிப்பாதையாக நிர்மாணிக்க இருக்கிறோம். இது மிகப்பெரிய அபிவிருத்தியாகும். 28 கோடி ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு பல பிரச்சனைகள் வந்தன. கோவிட் தொற்று நெருக்கடி காரணமாக மக்களின் உயிர்களை காப்பாற்ற மாத்திரமன்றி அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது. கோவிட் சிக்கலுக்கு மத்தியிலும் இந்த நாட்டிற்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகளை வழங்க துறைமுக அதிகார சபை ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். அதனை கொளரவமாக நினைவுபடுத்துகிறோம். சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை தமது உயிரை அர்ப்பணித்து செயற்பட்டதோடு துறைமுக ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள்.
அதே போல் முப்படை பொலிஸார் அரச துறையில் பல்வேறு அமைச்சுக்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பு வழங்கின. அதை ஒருபோதும் மறக்க முடியாது. வேலை செய்யாதவர்கள் அரசாங்கத்தின் மீது சேறு பூசினார்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களை முட்டாளாக்க பாடுபட்டார்களே தவிர மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் சிந்திக்கவில்லை. பிரேமதாச குழுவும் திசானாயக்க குழுவும் இந்த நாட்டுக்கு பாதகமாகவே செயற்பட்டார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை அவமதித்தார்கள். அவருடைய திறமையான தலைமைதுவத்தால் தான் இன்று நீங்களும் நானும் இப்படி பேசிக் கொண்டிருக்கிறோம் . ஜனாதிபதி ராஜபக்ஷ நாட்டு நலனுக்காக சரியான முடிவு எடுத்ததால் தான் நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தது. முழு உலகமுமே தடுப்பூசி ஏற்றலை உறுதி செய்து அதனை வழங்க முடிவு செய்த போது இலங்கைக்கு அதனை எடுத்து வர முற்பட்ட போது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து குழிபறித்தார்கள்.

தடுப்பூசி வழங்க தயாரான போது ஒரு மாதம் வரை தாமதித்ததாக பொய்ப்பிரசாரம் செய்தனர்.ஆரம்பத்திலேயே தடுப்பூசி எடுத்துவர முடியாது என்றார்கள். தடுப்பூசி கொண்டுவந்த போது பல்வேறு பிரசாரங்களை பரப்பினர். தடுப்பூசி ஏற்றினால் பல்வேறு பக்கவிளைவுகள் வரும் என்றார்கள். இரண்டுவருடத்தில் இறக்க நேரும் என்றார்கள்.
அவர்களின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஒன்றிணைந்து அரச அதிகாரிகளை வழிநடத்தி பொய்ப் பிரசாரம் செய்தனர். அவர்களின் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பொய்யை பரப்பினார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான பணத்தை தேடி எடுத்து மக்களை காப்பாற்ற முற்பட்ட போது அவரை அவமதிப்பதை தான் எதிரணி செய்தது. யுத்தத்திற்கு முடிவு கட்டிய பாதுகாப்பு செயலாளரை போன்றே நாட்டு மக்களின் உயிர்களை காத்த தலைவராக அவர் வரலாற்றில் பதியப்படுகிறார். எமது அரசாங்கம் மிக அமைதியான அரசாங்கமாகும். எமது ஜனாதிபதி அமைதியான தலைவராகும். அவர் அமைதியாக மக்களுக்கு செய்யவேண்டியவற்றை செய்து வருகிறார்.
எதிர்கட்சி என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம்.நாய்கள் எவ்வளவு தான் குரைத்தாலும் .தவலம் முன்னோக்கிச் செல்லும் என்று ஊர்களில் சொல்வார்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும் . நாங்கள் ஒரு வருடமும் 7 மாதங்களும் அரசியல் செய்யவில்லை. நாங்கள் அரசியலுக்கு பதிலாக எங்கள் நாட்டு மக்களை தொற்றிலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஏனைய நாடுகளின் மக்கள் ஆயிரக்கணக்கில் மடிகையில் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது என்று தான் அவர் யோசித்தார். மொட்டுக்கு வாக்களித்த மக்கள் மாத்திரமன்றி , பிரேமதாஸ மற்றும் திசானாயக்கவுக்கு வாக்களித்த மக்களை காப்பாற்றவும் ஜனாதிபதி செயற்பட்டார். ஆனால் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றுவதற்கு தான் எதிரணி முயன்றது. மக்கள் செத்தாவது அதிகாரத்துக்கு வரமுடியுமா என்று தான் எதிரணி சிந்தித்தது. ஆனால் நமது ஜனாதிபதி புத்தரின் போதனைகளை சொல்லி நம் நாட்டு மக்களை காப்பாற்ற பிரார்த்தித்தார்.

உள்நாட்டு உற்பத்திகளை துரிதமாக துறைமுகத்திற்கு எடுத்து வந்து வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பது தான் அதிவேக நெடுஞ்சாலை கொள்கையின் பிரதான நோக்கமாகும். விவசாயிகளின் உற்பத்திகள், கைத்தொழில் உற்கத்திகளின் இதயமாக துறைமுகம் காணப்படுகிறது, அதனால் தான் மஹிந்த ராஜபக்ஷ , எதிர்காலம் குறித்து சிந்தித்து 100 வருடங்களுக்கு ஏற்றவாறு இவ்வாறான திட்டங்களை தயாரித்தார். இவ்வாறான திட்டங்களை செயற்படுத்துவற்காகத் தான் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தார்கள்.
பிரேமதாஸ்வின் கொள்கை பிரகடனத்தில் சேதனப் பசளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 இல் இந்த நாட்டு மக்கள் சிறுநீரக நோயால் இறப்பதை நிறுத்துவதாக கூறினார்கள். இந்த நாட்டில் மக்களுக்கு விஷம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று கோட்டபய ராஜபக்ச கூறினார். 10 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதாகக் கூறப்பட்ட திட்டம் மக்கள் இறப்பதைக் காண விரும்பாததால் ஒரு ஆண்டுக்குள் அதனை செயற்படுத்த ஜனாதிபதி முடிவு செய்தார். அரசியல்வாதிகள் தேர்தலை இலக்கு வைத்தே பணியாற்றினாலும் தான் தேர்தலை பார்த்து பணியாற்றுவதில்லை என அவர் கூறியுள்ளார்.

சரியானதை செய்யும் ஜனாதிபதி என்று அவர் கூறினார். தேர்தலை பற்றி சிந்திக்காமல் முடிவுகளை எடுக்கும் ஒரே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தான் . யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று இந்த நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாத்த தலைவராகவும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் தலைவராக அவர் வரலாற்றில் பதியப்படுவார் என்று நான் நம்புகிறேன்.

கோவிட் நெருக்கடி இருந்த போதும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் சீன ஒப்பந்த நிறுவனம், இலங்கை பொறியியலார்கள், இந்த திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த தொற்று காலத்தில் மக்கள் மறைந்திருக்கையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்ற பங்களிக்கும் அனைவரும் வரலாற்றில் பதியப்படுவார்கள்.

அரிசி விலை ,பெற்றோல் விலை, கேஸ்விலை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது. ஜனாதிபதி கோட்டாபயவின் பிரச்சினையால் இவை உருவாகவில்லை. முழு உலகையும் சவாலுக்கு உட்படுத்திய இந்த தொற்றினால் தான் இந்த பிரச்சினைகள் எழுந்தன. தமது பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டால் பார்க்கச் செல்ல முடியாத அளவு மோசமான நோய் பற்றி இதற்கு முன்னர் நாம் அறிந்தது கிடையாது. இவ்வாறான நோயை நாம் எதிர்பார்க்கவில்லை. பெரிய நாடுகள் கூட மண்டியிட்டன. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய தான் நாட்டை முறையாக கட்டியெழுப்பினார்.
நாட்டை நிர்வகிக்க பணம் இருக்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார். பணமில்லாவிட்டால் அரசாங்க ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்கப்படுகிறது. சமுர்த்தி எவ்வாறு வழங்கப்படுகிறது. துறைமுகத்தை முன்னேற்றுவது எப்படி. பாதைகள் அமைக்கப்படுவது எவ்வாறு.மோசடி அற்ற நாட்டை உருவாக்குவது தான் ஜனாதிபதியின் பிரதானமான கொள்கையாகும். மத்திய வங்கியை கொள்ளையடித்ததாக அவருக்கு குற்றச்சாட்டுகிடையாது. தேசிய பாதுகாப்பை பூச்சியத்திற்குள் தள்ளியதாக குற்றச்சாட்டு இல்லை. மக்களை கண்டபடி சாவதற்கு இடமளித்ததாக குற்றச்சாட்டு இல்லை. கோவிட் நெருக்கடி இருந்த போதும் முன்னறை விட இன்று நாடு முன்னேறியுள்ளது. இந்த நாட்டை முன்னேற்றகரமான பொருளாதாரமுள்ள நாடாக நாம் மாற்றுவோம்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று முன் பொருத்தப்பட்டகொங்கிரீட் பால பாகங்கள் பொருத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு 3279 பாகங்கள் மீது நிர்மாணிக்கப்படும் இங்குருகடே சந்தியில் இருந்து காலிமுகத்திடல் துறைமுக நகரம் வரை கோபுரத்தின் மேல் செல்லும் துறைமுக பிரவேச அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது முன்பொருத்தப்பட்ட பாலம் அமைக்கும் விழா 2021-10-25 ஆம் திகதி நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :