பால் மற்றும் முட்டை விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பு?



மினுவாங்கொடை நிருபர்-
ண்மையில் எரிவாயு, பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை உயர்வை அடுத்து, பால் மற்றும் முட்டை விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.

முன் மொழியப்பட்ட எரிபொருள் விலை உயர்வால், போக்குவரத்து தொடர்பிலான செலவுகளைக் கருத்தில் கொண்டு,அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வுடன் மக்கள் ஏற்கனவே போராடினாலும், முட்டை விலையையும் அதிகரிப்பது தவிர்க்கமுடியாதது என்று, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்பு 15 ரூபா முதல் 17 ரூபா வரை விற்பனையாகி வந்த முட்டையின் விலை, தற்போது 20 ரூபா முதல் 22 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவும், திரவப் பாலுக்கான விலை உயர்வைக் கோரியுள்ளார்.
பால் விவசாயிகளிடமிருந்து பசும்பால், லீட்டருக்கு 50 - 60 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் வாங்கப்படுவதாகவும்,ஆனால், அதன் விற்பனை விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :