மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினால் எதிர்வரும் வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை முன்னாயத்தம் தொடர்பான கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலான தயார்படுத்தல் நிகழ்வு இன்று காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் காரைதீவு ஆர் கே எம் ஆண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்,காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களை மீள் நிர்மாணம் செய்தல், குழுக்களுக்கான பொறுப்புகளும் கடமைகளும் மற்றும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு என்பன பற்றியும் கிராம வரைபடத்தை வரைந்து அதில் அனரத்த பாதிப்பு பிரதேசங்கள் பாதுகாப்பு நிலயங்கள் என்பன குறிக்கப்பட்டு முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
0 comments :
Post a Comment