சார்ப் சம்பியன் சிப் உதைபந்தாட்டப் போட்டியில் 1:0 என்ற கோல் அடிப்படையில் வங்களாதேஷ் அணியினர் வெற்றி பெற்றுக் கொண்டர்.
இலங்கை மற்றும் வங்களாதேஸ் அணியிருக்கிடையிலான 1வதுபோட்டி மாலைதீவு விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை (1) நடைபெற்றது.
முதற்பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி எந்தவொரு கோலினையும் போடாமல்
சமனிலையில் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து 2வது பாதி ஆட்டத்தில் இலங்கை அணியின் பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் தமது தண்ட பிரதேசத்துக்குள் வைத்து பந்தை கையினால் தடுத்தன் காரணமாக நடுவரினால் தண்ட உதை பங்களாதேஷ் அணியினருக்கு வழங்கப்பட்டது.தண்ட உதையிணை வீரர் டொப்பு 55வது நிமிடத்தில் வெற்றி கோலாக மாற்றி வங்களாதேஷ் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியினருக்கு வெற்றிக் கோலினை பெற்றுக்கொடுத்த டொப்பு சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment