அந்த ஒரு நாளில்...



ரு மாணவனை பொறுத்தவரையில் அவனது கல்விப் பயணத்தில் கிடைக்க கூடிய விலைமதிக்க முடியாத மிகப்பெரிய வெகுமதி அவனது பட்டமளிப்பு விழாவாகத்தான் இருக்க முடியும். அந்த ஒரு தருணத்தைவிட அவனுக்கு கிடைப்பதற்கு அரிதான ஒன்று என எதுவுமே இருப்பதில்லை. தூக்கம் என்பதை புறம்தள்ளி இரவு பகலாக கண்விழித்து எப்பாடுபட்டாவது பரீட்சையில் சித்தியடைந்து தமது இலட்சியத்தை அடைந்துகொள்ள வேண்டும் என்ற கனவு மெய்ப்பட நான்கு வருடங்கள் போராடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு என்ற செய்தி செவிகளை தட்டும் போது கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் கூறிவிட எந்த கவிஞராலும் இயலாது.அன்று அந்த ஒரு நாளில்

பள்ளி வாழ்க்கை என்பது மறக்க முடியாத அனுபவம் என்றால் பல்கலை வாழ்க்கை..? அனைவருக்கும் பள்ளி வாழ்க்கை இருக்கும் ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே பல்கலை வாழ்க்கை கிடைக்கும். பள்ளி அனுபவம் மற்றும் பல்கலை அனுபவம் இரண்டும் வாய்க்கப்பெற்றவர்களின் அனுபவத்தை கூறிவிட எத்தனை கவிப்பேரரசுகளூம், கண்ணதாசர்களும் தேவைப்படுவார்களோ தெரியவில்லை அன்று அந்த ஒரு நாளில்.

இதற்கு முன்பு ஒருமுறையேனும் பார்த்திடாத புதிய முகங்களின் நட்பிற்கு மூழ்கித்திழைத்து, எல்லைகளை கடந்து பயணித்து மறக்க முடியாத அனுபவங்களை சேர்ந்து மனதுக்குள் புதையல் போல புதைத்து நினைத்து பார்க்காத அளவுற்கு எண்ணற்ற செயல்களை நிகழ்த்தியிருப்போம். அந்த ஒரு நாளில் புதையல் போல உறங்கிக் கிடந்த நினைவுகள் இதயத்தை கிழித்துக் கொண்டு சிதைவ்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அவற்றையும் சுமந்து கொண்டு நின்றிருப்பர் அன்று அந்த ஒரு நாளில்.

பட்டமளிப்பு என்றாலே பெற்றோர்களுக்கு இருக்கும் ஆனந்தம் எண்ணிலடங்காததாக இருக்கும். பெற்றோரின் இலட்சியம் தனது பிள்ளையின் பட்டமளிப்பாகத்தான் இருக்கும். தனது மகன் அல்லது மகள் மேடையேறி பட்டம் வாங்குவதை நேரில் கண்ணால் பார்க்க வேண்டும் என்று அங்கலாய்ப்பு இருக்கும் பட்டமளிப்பு விழாவில் தானும் ஒர் அங்கமாக இருக்க வேண்டும் என்ற எத்தனை பெற்றோர்களின் ஆசை அன்று நிறைவேறிக்கொண்டிருக்கும். ஒரு மாணவனுக்கு நான்கு வருட கடின உழைப்பின் பயன் அவனது பட்டமாக இருக்கும். ஆனால் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் அந்த ஒரு நாள் எத்தனை வருட கடின உழைப்பின் பலன் என்று அவர்களின் கண்ணீர் கலந்த புண்ணகை கூறிவிடும்

கறுப்பு கோட்டும், தலையில் தொப்பியும், கழுத்தில் பதக்கமும், கையில் சுருட்டிய ஒரு பேப்பரையும் கொண்டு வரும் தமது பட்டதாரிப் பிள்ளைகளை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களுக்கு உலகத்தையா தலைகீழாக புரட்டிப்போட்ட சந்தோசம் இருக்கும். அதே கறுப்பு கோட்டும், தலையில் தொப்பியும், கழுத்தில் பதக்கமும் தனது மகள் அல்லது மகன் பெற்றோர்களுக்கு அனிவிக்கும் போது சகல பாரமும் இறங்கியதை போல இருக்கும். அந்த ஒரு தருணம் ஒரு பிள்ளை தனது பெற்றோர்களுக்கு செய்யும் வாழ்வின் ஆக்கூடிய பேரானந்தம் அதுவாக இருக்கும் அன்று அந்த ஒரு நாளில்.

ஆயிரம் கடைகள் ஏறி இறங்கி பதினைந்து ஆயிரம் ரூபாய்க்கு கோட்டும், பத்தாயிரம் ரூபாய் சாறியும், பத்தாயிரம் ரூபாய் முக அழகுக்கும் தலைமுடி அலங்காரத்திற்கும் செலவு செய்து நெஞ்சை நிமிர்த்தி தலையை உயர்த்தி வீறுநடை போடுவவது அன்ற நாளின் கதாநாயகர்களுக்கு போதுமானதாக அமையாது. அங்கங்கே நின்று நினைவுகளாக சில புகைப்படங்களை அதுதான் அன்றய கதாநாயகர்களுக்கு இறுதி பதிவாக பல்கலைக்கழகம் அளித்திருக்கும் அன்று அந்த ஒரு நாளில்.

எத்தனை முறை முட்டிமோதி கட்டியணைத்திருந்தாலும் அன்றய ஒரு நாளில் நண்பர்களை முட்டிமோதி கட்டியணைக்கும் போது உள்ளுருந்து வரும் மூச்சுக்காற்றின் வேகமும், இதயத் துடிப்புன் ஓசையும் பிரிவின் உக்கிரத்தினை காட்டும் இருப்பினும் அந்த ஒரு இறுக்கமான இறுதி கட்டியணைப்பிற்கு உள்ளம் ஏங்கித்தவிக்கும். பல்கலைக்கழக மாணவனுக்கு தன் வாழ்நாள் முழுவதும் வரக்கூடாது என்று நினைக்கும் ஒரு நாள் அனறு அந்த ஒரு நாளிக இருக்கும்.

ஏராளமான மன்னிப்புக்கள் கண்ணீர் கலந்த பிரியாவிடை, இறுதியில் ஒரு சிரிப்பு பல்கலைக்கழக மதில்களில் அன்றய நாள் முழுவதும் எதிரொலித்த்க் கொண்டே இருக்கும். வரமும் சாபமும் ஒரே நாளில் மாறி மாறி அனுபவிக்கும் கொடுமை அன்று ஒரு நாளில் நிறைவேறிக்கொண்டிருக்கும்.

பொக்கிஷம் போல் சாவி போட்டு பூட்டிவைத்து இரவு பகலாக சதையை தின்று இரத்தத்தைக் குடித்த எண்ணற்ற காதல் காவியங்களுக்கு இறுதி நாளும் அதுதான் இன்று எப்படியாவது உதடுகள் திறந்து அடைத்து வந்திருந்த காதலைசொல்லிவிட வேண்டும் என்று எத்தனை இதயங்கள் பதைபதைப்புடன் இருக்கும். அன்று ஒரு நாளில் எத்தனையோ காதல்கள் காவியங்களாக மாறி இருக்கும். அன்று ஒரு நாளில் நிறைவேறிய காதலும் இருக்கும், அனறோடு உடைந்து காற்றோடு கலந்துபோன காதல்களும் இருக்கும் அன்றய நாளில்.

இறுதியாக ஒருமுறை அதை செய்வோம் இறுதியாக ஒருமுறை இதை செய்வோம், இறுதியாக ஒரு முறை அதில் இருப்போம், அதை செய்வோம் இதை செய்வோம் என்று இறுதியாக இறுதியாக என்று அந்த இறுதி என்ற சத்தம் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். கடிகாரம் சுற்றக்கூடாது என்று மனம் ஏங்கித்தவிக்கும். அன்றய நாள் முடியாமல் தொடர வேண்டும் என்ற மனப்போராட்டம் இருக்கும்.

அத்தனை கோடி நினைவுகளை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தரப்போகும் அந்த நாள் இப்போது அப்கடியான ஒரு நிலைமையை தரப்போவதில்லை இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுவோம் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். எந்த ஒரு பட்டதாரியும் அந்த ஒரு நாளுக்காக எத்தனை முறை ஏங்கித்தவித்திருப்பார்கள். வாழ்க்கையில எந்த ஒரு பட்டதாரியும் அந்த நாளை வேண்டாம் என ஒதுக்கி வைத்து விட்டு பட்டம் பெறத்துணியவும் மாட்டார்கள். இருப்பினும் அதற்கு அவர்கள் துணிகிறார்கள் என்றால் தங்களது மனதிற் எத்தனை ஆறுதல் வார்த்தைகள் கூறியிருப்பார்கள்

. கொரோன தொற்றுநோய் காரணமாக பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் மாணவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றால் இந்த இணக்கத்திற்குப் பின்னால் எத்தனை வலிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். முகக்கவசம் முகங்களை மட்டும் அல்ல உருவங்களையும், உணர்வுகளையும் மறைந்த்து விட்டது. அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு பட்டம் பெறவேண்டுமா என்று மனம் சஞ்சலிக்கும். எத்தனை ஆசைகளும் புதையப் போகின்றன, எண்ணற்ற கனவுகளும் இலட்சியங்களும் உருவமில்லாமல் போகப்போகின்றன. இறுதியாக ஒரு கட்டியணைப்பு, இறுதியாக ஒரு பார்வை, இறுதியாக ஒரு வார்த்தை இறுதியாக ஒரு அழுகை இறுதியில் ஒரு சிரிப்பு அதற்கு கூட வாய்ப்பில்லாமல் போகப்போகின்றது.

எதற்காக இந்த சாபம் இப்போது எங்களுக்கு பட்டம் தேவையில்லை என்று கூறக்கூட வழியில்லை. காரணம் உங்களையும் சமூகம் எதிர்பார்க்கிறது 4 வருட பட்டப்படிப்பை 5 வருடம் படித்து பெற்றால் அதைப் போன்ற கேடு இல்லை. இனியும் காலம் தாழ்த்த விருப்பம் இல்லை. வாழ்க்கை ஒருபுறம் வேலை, குடும்பம், எதிர்காலம் என ஒருபுறம் அழுத்திக்கொண்டிருக்கிறது. வருங்கால சந்ததியினருக்கும் வழிவிட வேண்டும். இத்தகைய சூழலில் பட்டம் பெறுவது வரமா சாபமா நினைவுகள் தான் தீர்மானிக்கும். நிகழநிலையில் பட்டம் பெறப்போவது உயிர்வுட்டுச் சென்ற ஒரு கூடதான் அங்கு தெரிவதும் அந்த கூடாகத்தான் இருக்கும்.


சூரியா (sp)
4 ஆம் வருடம்
ஊடக கற்கைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழககம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :