அரசாங்கம் மிகக் குறைந்த நைட்டஜன் கொண்ட பசளையை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதனையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். திஸ்ஸ விதாரன



அஷ்ரப் ஏ. சமத்-
நான் முன்னாள் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சராக இருந்த காலத்தில் பசளை உற்பத்திகாக சிலின்டெக் எனும் நிறுவனத்தினை கோமகவில் உருவாக்கினேன். அந் நிறுவனத்தினை மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இருவரும் இணைந்து இந் நிறுவனத்தினை திறந்தும் வைத்தோம். ஆனால் அரசாங்கம் மிகக் குறைந்த நைட்டஜன் கொண்ட பசளையை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதனையிட்டு நாம் மிகவும் கவலையடைகின்றேன். என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பிணருமான பேரசிரியருமான திஸ்ஸ விதாரன தெரிவித்தாா்

அவா் தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டில் உள்ள இந் பசளை நிறுவனம் ஊடாக எமது நாட்டுக்கும் மட்டுமல்ல தெற்காசிய நாடுகளுக்கும் பொருத்தமான நைட்ரஜன் உள்ளுாாிலேயே உற்பத்தி செய்ய முடியும் . என்பதனை நான் உறுதியாக்கினேன். அத்துடன் எமது நாட்டு பசனளயில் 40 வீதம் நைட்ரஜன் அடங்கிய இரசாயன பசளையை உற்பத்தி செய்ய முடியும் ஆனால் அரசாங்கமும் ஜனாதிபதியும் 4 வீதம் நைட்ரஜனை மட்டுமே கொண்ட பெருந்தொகையிலான பசளையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. இவ் விடயத்தில் எமது உள்ளுாா் பசளை உற்பத்தியையே இக் கால கட்டத்தில் அபிவிருத்தி செய்தல் வேண்டும். இவை எமது நாட்டுக்கும் மட்டுமல்ல வெளிநாட்டுக்கும் ஏற்றமதி செய்யக்கூடிய இப் பசளை நிறுவனத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் முன் வருதல் வேண்டும். என பேராசிரியரும் பாராளுமன்ற உறுப்பிணருமான திஸ்ஸ வித்தாரன தெரிவித்தாா்.

இன்று(25) கொம்பனி வீதியில் உள்ள லங்கா சமாஜா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலளாா் மாநாட்டிலேயே பேராசிரியா ் மேற்கண்டவாறு தெரிவித்தாா். அவா் தொடா்ந்து அங்கு அவா் கருத்து தெரிவிக்கையில் - 2010ல் இந் நிறுவனம் அபிவித்தி செய்யப்பட்டது.பேராசிரியா் நில்வலா கோதாகொட அவா்கள் இந் நனோ தொழில்நுட்ப விடயத்தினை இந் நிறுவனத்திற்கு பங்களிப்பு செய்தாா். இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசி, மற்றும் தேயிலைக்கும் அவசியமான 40 வீதமான நைட்டரஜைனைக் கொண்ட பசளையை உறுவாக்கக முடியும். இதனை அவா்கள் ஆராய்ச்சி செய்தனால் நல்லதொரு முபினை கண்டு பிடித்தாா்கள் சிறந்த விளைச்சல் கொண்டவையாக இருந்தன

யாலை விவசாய பருவத்தில் 5 மெற்றிக் தொன் அரிசிக்கு 50 கிலோ கொண்ட நைட்ரஜன் போதுமானவையாக இருந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யும் நைட்ரஜன் தாவர இலைகள் மட்டுமே வளா்வதற்கு சிறந்தது. ஆனால் எமது பசளை உற்பத்தி பயிா்களின் வேரின் ஊடாக சிறந்த பயிா்ச்செய்கைக்கு ஏற்றதாகும். இத்துறையை மீள கட்டியெழுப்புவதற்காக எமது நாட்டு விஞ்ஞானிகள் பேராசிரியா் அமேரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ளனா். அவா்களை இலங்கைக்கு அழைத்து எமது சிலின் டெக் நிறுவனத்தினை அபிவிருத்தி செய்யமுடியும் அதனுடாக 12ஆயிரத்திற்கும் அதிகமான சிறு நடுத்தர விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கமுடியும். ஏற்கனவே எனது அமைச்சுக் காலத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான நடுத்தர விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஆகவே பிரதமா் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி அவா்களும் இனைந்து பேராசிரியா் கோதாகொடவை அழைத்து 3 வாரத்திற்குள் இந் நிறுவனத்தினை ஆரம்பிப்பதற்கு உள்ளுா் விவசாயிகளுக்கு இராயாணப் பசளையை வழங்க முடியும் என்பதனை பேராசிரியா் தெரிவித்தா்.
இவ் வைபவத்தில் ஊவா மாகாணத்திற்காக லங்கா சமாஜமா கட்சியின் புதிய அமைப்பாளராக சர்சமா சுவாமியும் இக் கட்சியில் இணைந்து கொண்டாா் எதிா்காலத்தில் இக்கட்சியின் ஊடாக சர்சமா சேவையாற்ற உள்ளதாகவும் தெரவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :