ஜனாதிபதியின் திட்டத்தில் கோழிக் குஞ்சுகள் கையளிப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
னாதிபதியின் சுபீட்சமான எதிர்காலம் திட்டத்தின் மூலம் சமுர்த்தி திணைக்களத்தினால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராசா, செயலக கணக்காளர் எம்.சஜ்ஜாத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேகவர் பிரிவில் இருந்து மூன்று பேர் தெரிவு செய்யப்பட்ட எட்டு கிராம சேவகர் பிரிவில் இருந்து இருபத்தி நான்கு பேருக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பதின்மூன்று கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டதாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எமம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :