முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமின் முயற்சியினால் சம்மாந்துறை சென்நெல் கிராம மக்களுக்காகவும் மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவின் நிர்மாண பணிகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நேற்று களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு நிலைகளை ஆராய்ந்தார்.
இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியர், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர். மேலும் இப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இவ் வைத்திய பராமரிப்பு பிரிவு தொடர்பாக மேலும் சில கோரிக்கைகள் முன் வைத்தபோது அதனை உடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment