அமைச்சர் ஜோன்ஸ்டன் ராஜகிரிய, மதின்னாகொடவில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-


தினமும் 15,000 வாகனங்கள் செல்கின்றன . ஆனால் பல ஆண்டுகளாக புதிய பாலம் கட்டப்படவில்லை
- ராஜகிரிய, மதின்னாகொடவில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் ஜோன்ஸ்டன் தொடங்கி வைத்தார்.

இராஜகிரிய - மதின்னாகொட வீதியில் கொலன்னாவ கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்ட பழைய மதின்னாகொட பாலத்திற்கு பதிலாக 43 மில்லியன் ரூபா செலவில் 80 மீற்றர் நீளமான இருவழிப்பாதை நிர்மாணிக்கும் பணி
ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று (27-10-2021) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பழுதடைந்துள்ள இந்த பாலம் கொலன்னாவ மற்றும் கோட்டே தேர்தல் தொகுதிகளை இணைக்கிறது. ஒரு வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை நாளாந்தம் சுமார் 15,000 வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல் காரணமாக ராஜகிரிய வழியாக கொழும்புக்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிர்மாணப் பணிகள் உள்ளூர் நிதியில் நிர்மாணிக்கப்படுவதோடு இதற்கான ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும். எனினும் இந்த ஒப்பந்தத்தை 12 மாதங்களாக குறைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :