உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை



அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை பொலிஸ் மாவட்டத்துக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி பதுளை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பி.எம்.ஜயரத்ன மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதம பொலிஸ் பரசோதகராக கடமையாற்றி வந்த நிலையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக
பதவி உயர்வு பெற்று, மன்னார் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றலாகிச் செல்லும் கலாநிதி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோருக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு நேற்று சனிக்கிழமை (16) மாலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரினதும் சிறப்பான சேவைகள் மற்றும் நிர்வாகத் திறமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது உதவிப் பொலிஸ் அத்தயட்சகர்கள் இருவரும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் சார்பில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனையில் கடமையாற்றிய தமது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பொலிஸாருக்கும் பிரியாவிடை நிகழ்வை ஒழுங்கு செய்த சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நிர்வாகத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இவர்கள் இருவரும் தமதுரையில் குறிப்பிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் இப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்று, உதவிப் பொலிஸ் அத்தயட்சகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :