சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையயளிப்பு



எஸ்.எம்.ம்.முர்ஷித்-
னாதிபதியின் என்னக்கருவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்ககும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செலாளர் பிரிவுகளிலும் சௌபாக்கியா வீடமைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வீடமைப்பு வேலைகளை பூரணப்படுத்திய வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று திங்கள் கிழமை இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பூரணப்படுத்தப்பட்ட மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது இவ் வீடுகளுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இரண்டு லட்சம் ரூபா வீதம் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்டதுடன் மீதித் தொகையினை பயனாளிகளின் பங்களிப்பாக வீடுகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி. தவராஜா கலந்து கொண்டதுடன் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம். பாஸ்கரன், பிரிவுகளுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும்; கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :