இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் "அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் | Children Before Everything" எனும் கருப்பொருளின் கீழ் உலக சிறுவர் தின நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எஸ்.எல். ஸபூறுல் ஹஸீனாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் ஏனைய அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், கிராம சேவை உத்தியோகத்தர்களான யூ.எல்.அமீர், எம்.ஜே.எம். அதீக், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம். எஹியால், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப்பின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் (NCPA) தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment