வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல், பிரதேச அபிவிருத்தி மற்றும் பிரதேச முரண்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இன்று (04) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டதுடன் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய கருத்திட்டங்களை மையமாக கொண்டு இதன்போது ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் அப்துல் மஜீத் ரோஷன் மரைக்காயர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment