முஸ்லிம் சமூகத்தை சீண்டும் சூழ்ச்சிகள் இன்னும் ஓயவில்லை. -நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக அரங்கேற்றப்படும் இன, மத குரோதச் செயற்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். மஹ்தி கவலை வெளியிட்டுள்ளார்.

இன்று(02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறான கவலையை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பல் சமூகம் வாழும் இந் நாட்டில் அனைத்து சமூகத்தையும் அணைத்துக் கொண்டு நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து கொண்டும் இன்னும் இன, மத குரோதங்களால் முஸ்லீம்களை சீண்டுகின்ற வங்குரோத்து அரசியற் செயற்பாடுகள் அரங்கேற்றப் படுகின்றமை குறித்து பௌத்த பெரும்பான்மை மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய இறைவனை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி என கூறியமை, ஒவ்வொரு முஸ்லீமும் ஐ.எஸ்.ஐ.எஸ் சிந்தனையை கொண்டவர்கள், முஸ்லீம்கள் இறைவனுக்கு அடுத்ததாக தன்னையே வணங்குகிறார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர கூறியமை எல்லாம் உலக வாழ் முஸ்லிம்களை வெகுவாக வேதணைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இக்கருத்துக்கள் யாவும் இஸ்லாமிய கடவுள் கோட்பாட்டுகளை மோசமாக கேலி செய்வதோடு அவர்களின் உள்ளங்களையும், உணர்வுகளையும் நோவினை படுத்துகின்ற மத நிந்தனை கொண்ட வெறுக்கத்தக்க செயற்பாடுகளும் ஆகும்.

அரசியல் இலாபங்களுக்காக பொறுப்பு வாய்ந்தவர்களால் தெரிவிக்கப்படும் இவ்வாறான கருத்துகள் இன முரண்பாடுகளையும் கலவரங்களையும் ஊக்கப்படுத்துமே தவிர இந்நாட்டையோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தையோ ஒருபோதும் அபிவிருத்தி செய்யப் போவதில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :