அரசாங்கத்தின் புதிய பசளை திட்டத்தினால் விவசாயமும் விவசாயிகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கி இருக்கின்றார்கள் என கிண்ணியா நகரசபை உறுப்பினரரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதல் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று(04) ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் இரசாயன பச்ளையை வழங்கிவந்த அரசாங்கம் இரசாயன பசளையை நிறுத்தி சேதனப் பசளை திட்டத்தினை முன் மொழிந்திருக்கிறது.
சேதனப் பசளையை தயாரிப்பதற்கான போதிய வாய்ப்புகள் நாட்டில் இல்லாமையினால் அரசானது பசளையை சினாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டிருந்தது.
சீனாவின் சேதனப் பசளை உரிய தராதரத்தில் இல்லாமையினால் மீண்டும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு முயற்சிப்பதாக கௌரவ அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.
ஒழுங்கான திட்டமிடல் இன்றி அரசினால் மேற் கொள்ளப்படுகின்ற இவ்வாறான காலதாமதமான செயற்பாடுகள் காரணமாக உரிய வேளைக்கு பசளையை வழங்க முடியாமல் போயுள்ளது.
நிலத்தைப் பண்படுத்துகின்றபோது பயன்படுத்தப்பட வேண்டிய சேதனப் பசளை உரிய நேரத்திற்கு கிடைக்காமையினால் பசளை இன்றியே பயிர்செய்கை நடவடிக்கைகளை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.
இதன் பின்னர் பசளைகள் வழங்கப்பட்டாலும் அவற்றை பயிர்களுக்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தினாலும் உரிய பலனும் கிடைக்காது.
ஆக மொத்தத்தில் விவசாயமும் விவசாயிகளும் இன்னும் ஆபத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கமானது இம்முறை இரசாயன பசைளையை உடனடியாக இறக்குமதி செய்து அவசரமாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment