மருதமுனை அல் ஹம்றாவில் எட்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.



பி.எம்.எம்.ஏ. காதர்-

ண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் மருதமுனை அல் ஹம்றா வித்தியாலய மாணவர்கள் எட்டு பேர் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அபூதாலிப் பஸ்ஹம் தானிஸ், முகம்மட் றவூப்டீன் முகம்மட் றிகாப், மனார்தீன் பைஹா சைனப், முகம்மட் புவாத் ஜுஸாமா, முகம்மட் ஜெமீல் பாத்திமா சபா, முகம்மட் சித்தீக் பாத்திமா ஹனூத், நஜ்முத்தீன் மகா லைனா, சஹ்துல் நஜீம் அம்னத் அபா ஆகிய மாணவர்களே ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்ற மாணவர்களாவர்.

இப் பாடசாலையில் 62 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் ஆறு மாணவர்கள் '8ஏ' சித்திகளையும் ஆறு மாணவர்கள் '7ஏ' சித்திகளையும் மூன்று மாணவர்கள் '6ஏ' சித்திகளையும் மூன்று மாணவர்கள் '5ஏ' சித்திகளையும் பெற்று சிறந்த பெறுபேற்றை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பரீட்சைப் பெறுபேறு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளமை சிறப்பம்சமாகும். அதிபர் இப்றாலெப்பை உபைதுல்லா அவர்களின் சிறந்த வழிகாட்டலில் பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசரியர்களின் பங்களிப்புடன் இந்த பெறுபேறு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :