வாகரையில் சிங்கள மக்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு




எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காரமுனை கிராமாத்தில் யுத்தகாலப்பகுதியில் சிங்கள மக்கள் குடியிருக்கவில்லை என்று நேற்று அப்பகுதியில் காணிகளை பார்வையிட வந்த சிங்கள சகோதரர்களையும் அரச அதிகாரிகளையும் வெளியெருமாறு கோரி முஸ்லீம் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் கடந்த யுத்தகாலத்தின் காரணமாக 1983ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காரமுனை பகுதியில் தாங்கள் குடியிருந்ததாகவும் எங்களுக்கான காணிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று வந்தவர்களையும் அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளும் பிரதேச பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்னர்.

1976ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் எங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு ஐந்து ஏக்கர் காணியும் தாங்கள் குடியிருப்பதற்கு ஒரு ஏக்கருமாக மொத்தமாக ஆறு ஏக்கர் ஒரு குடும்பத்திற்காக 190 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் காரணமாக நாங்கள் இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் யுத்தம் முடிந்த பின்னர் தொடக்கம் நாங்கள் எங்களுக்கான காணியை வழங்குமாறு அரச திணைக்களங்களுக்கு முறையிட்டதன் பயனாக நேற்று 21.10.2021 (வியாழக்கிழமை) எங்களது காணிகளை அடையாளப்படுத்துமாறு காணி திணைக்களத்தினால் அழைக்கப்பட்டதற்கிணங்க தாங்கள் இன்று வருகை தந்ததாகவும் எங்களது காணிகள் வேறு நபர்களால் பராமரிக்கப்பட்டு வருமாக இருந்தால் எங்களுக்கு மாற்றுக் காணி வழங்குமாறும் வருகை தந்த சிங்கள மக்கள் தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த பொது மக்கள் காரமுனை பிரதேசத்தில் காலங்காலமாக முஸ்லீம் மக்கள் குடியிருந்ததாகவும் எங்களுள் அயல் கிராமங்களான மாங்கேணி மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் தமிழ் சகோதரர்களும் வாழ்ந்து வந்ததாகவும் சிங்கள சகோதரர்கள் இருக்கவில்லை என்றும் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சானக்கியன் கருத்து தெரிவிக்கையில் வாகரை பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் இங்கு அரசாங்கத்தினால் திட்டமிட்டு குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் நடக்கின்றன அதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் இன்று தமிழர்களின் காணிகள் பரிபோகும் நிலையில் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாக கூறும் இராஜாங்க அமைச்சரோ கிழக்கை மீட்கப் போகிறோம் என்று தெரிவிக்கும் அபிவிருத்தி குழு தலைவரோ மாவட்டத்தில் முஸ்லீம்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பவரையும் காணவில்லை மக்களுக்கு பிரச்சினை வரும்போது பிரச்சினையை தீர்த்து வைக்காதவர்கள்தான் இன்று அபிவிருத்தி தொடர்பில் பேசுவதாக தெரிவித்தார்.

இங்க கருத்து தெரிவித்த காணி திணைக்களத்தின் காணி ஆணையாளர் கீர்த்தி கமகே கருத்து தெரிவிக்கையில்.

கடந்த காலத்தில் இப்பகுதியில் குடியிருந்நதாக ஆவணஙகளை 190 குடும்பங்களை சேர்ந்தவர்கள் எங்களிடம் விண்ணப்பித்ததற்கிணங்க நாங்கள் குறித்த நபர்களின் காணிகளை அவர்கள் காட்டும் எல்லையில் அடையாளப்படுத்தி கொடுப்பதற்காக வந்ததாகவும் அவர்கள் எல்லைகளை காட்டாத சந்தர்ப்பத்தில் காணிகளை உறிய முறையில் அடையாளப்படுத்த முடியாது என்றும் குறித்த காணிகளை வேறு யாராவது முறையாக பராமரித்து வந்தால் காணி கோருபவர்களுக்கு மாற்று காணி வழங்கவதற்கான நடிவடிக்கையினை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் ஜி.ரவிராஜ், மாவட்ட செயலக காணி அதிகாரிகள், வாகரை பிரதேச செயலக அதிகாரிகள், பொலநறுவை மாவட்ட செயலக அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமனற் உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :