சர்வதேச முதியோர் தினத்தினையொட்டி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் 100 வயதினைக் கடந்த சிரேஷ்ட பிரஜைகள் பலர் கெளரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் ஷாபிரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.கைஸினால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இந்த கெளரவிப்பு நேற்று இடம்பெற்றது.
இதன் போது அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவில் வசிக்கும் யூசுப் லெப்பை உதுமாலெப்பை (100வயது), அட்டாளைச்சேனை 01 ஆம் பிரிவில் வசிக்கும் ஏ.எல்.சுலைமாலெப்பை (104வயது), பாலமுனை 01 ஆம் பிரிவில் வசிக்கும் அவ்வா உம்மா (104வயது) உள்ளிட்ட பலரை அவர்களுடைய வீட்டிற்குச் சென்று பொன்னாடை போர்த்தி பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் ஷாபிர், உதவிப் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதியோர் தினத்தில் முதியோர்களை வீடு தேடிச் சென்று கெளரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக வரலாற்றில் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment