எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் என்பவற்றை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தி



ன்று உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒருபுறம், ஒரு நாட்டின் எதிர்கால செழிப்பு மறுபுறம், நாட்டின் பெருமை இதனை எடுத்துக் காட்டுகின்றவாறு சிறுவர் மற்றும் முதியோர் பிரதிபலிப்பு.

இன்றைய குழந்தைகள் வரலாற்றில் இல்லாத ஒரு தனித்துவமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

கொரோனா பேரழிவு சிறுவர் உலகத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தியுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளாக கல்வி ரீதியாக பல பிரச்சனைகளையும் சிறுவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இது முன்பு ஒருபோதும் கண்டிராத சூழ்நிலை மற்றும் நம் பிள்ளைகளை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலப்படுத்த வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத பொறுப்பும் நம்மிடம் உள்ளது.

தற்போதைய சவால்களைக் கண்டறிந்து, கல்வி மற்றும் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்பதோடு குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம், சிறு வயதுத் திருமணம் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் ஆகியவை கடுமையான அச்சுறுத்தலாக மாறிவிட்டன, அவற்றிலிருந்து விடுபட்ட ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டிய கனவுகளை நனவாக்க வேண்டும்.
சிறுவர்கள் தொடர்பான உலகளாவிய சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறுவர்களை ஒதுக்குதல், சிறுவர்களின் அதிகபட்ச நன்மைகள், இருப்பு மற்றும் வளர்ச்சிக்கான உரிமை, சிறுவர்களின் கருத்துக்களை மதித்தல் போன்ற கோட்பாடுகளைப் பாதுகாத்தல் எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சிறந்தது பிள்ளைக்கு என்னும் கூற்றொன்று உள்ளது ஆனாலும் நடைமுறையில் அது உண்மையா என வினவ வேண்டியுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு முதியோர் தினம், கொரோனா சவால்மிக்க நிலையில் உலகின் முதியோர் சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் நேரத்தில் கொண்டாட வேண்டியுள்ளது.
முதியோர் ஒரு நாட்டை நடாத்திச் செல்பவராக இருப்பதுடன் அவரின் வாழ்க்கை ஆக்கபூர்வமாக இருப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பும் உண்டு.
உலக பேரழிவைக்குள்ளேயே அனைவரும் உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் ஆகிய இரண்டையும் கொண்டாட வேண்டியுள்ளது.
வீட்டில் முதியோருடன் நெருங்கி சிறுவர் தினத்தையும் சிறுவருடன் நெருங்கி முதியோர் தினத்தையும் கொண்டாடுவது ஒரு வகையில் தனித்துவமானது என்பதுடன் சிறுவர்களினதும் முதியோர்களினதும் உலகு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்குப் பிரார்த்திக்கின்றேன்.

சஜித் பிரேமதாச
எதிர்க் கட்சித் தலைவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :