பொது அறிவு வினா விடைப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்றக் இரண்டாமிடம்



எம்.எஸ்.எம். ஸாகிர்-
பொது அறிவு வினா விடைப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடித் கொடுத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் அ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடத்திவரும் தமிழ் திறன் காண் போட்டிகள் 2021 நிகழ்நிலை ஊடாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் (09) நடைபெற்ற பொது அறிவு வினா விடைப் போட்டியில் கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளுடன் ஏ. பைஹான் அஹமத் - 12 விஞ்ஞானப்பிரவு, ஆர்.ஏ. உமைர் - 12 விஞ்ஞானப்பிரிவு, எம்.எம்.எம். ஆகில் - சாதாரண தரம், ஐ. பிலால் - சாதாரண தரம் ஆகியோரே பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியுள்ளனர்.

இவர்களை வழிப்படுத்தி உதவிய பழைய மாணவரும் பாடசாலையின் முன்னாள் தமிழ் இலக்கிய மன்ற தலைவருமாகிய ஏ. முஸ்பிர் அஹமத் மற்றும் பொறுப்பாசிரியர் வை.எம். அஷ்ரப் ஆகியோருக்கு பாடசாலை முகாமைத்துவ குழு, ஆசிரியர் குழாம், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கல்லூரியின் அதிபர் அ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :