சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள்" என்ற தொனிப்பொருளில் சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டியதாக தேசிய நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பலாக்கன்றுகள் நடும் வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் பயனாளிகளுக்கு பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல்பணிப்பாளர் டீ.மோகனகுமார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.எம். அச்சி முஹம்மட், மற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது சிறுவர் நல உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். இம்தியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment