பொலிவேரியன் கிராம தாருஸலாம் சிட்டியிலிருந்து முதன்முறையாக இருவர் மருத்துவர்களாக கடமைகளை பெறுபேற்றனர்.(படங்கள் இணைப்பு)



எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம தாருஸலாம் சிட்டியிலிருந்து முதன்முறையாக இருவர் இன்று மருத்துவர்களாக தமது கடமைகளை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் முன்னிலையில் பெறுபேற்று கொண்டனர். இதில் மருத்துவர்களாக தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்ட டாக்டர் எம்.பி.முஹம்மது ஸில்மி கிழக்கு பல்கலைக்கழக மாணவராவார். இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வியை மிராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார். இவர் ஆசிரியர் என்.எம். புஹாரி மற்றும் முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.எம். ஜெமீலுன்னிஸா தம்பதிகளின் கடைசி புதல்வராவார்.

மற்றும் மருத்துவராக தமது கடமைகளை இன்று பொறுப்பேற்று கொண்ட டாக்டர் ஏ.எப்.பாத்திமா அஸ்மா ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவியாவார். இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் கற்றுக்கொண்டார். ஏ.எல். பரீட், ஏ.வி.எஸ். சாபிரா தம்பதிகளின் 13 பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான இவர், பாடசாலை காலம் முதல் மிகவும் திறமையானவராக இருந்து வந்துள்ளார்.

இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும், துஆ பிராத்தனையும் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம தாருஸலாம் சிட்டி அல்- அமானா நற்பணிமன்ற காரியாலயத்தில் நற்பணிமன்ற தலைவர் ஏ.எல். பரீட் தலைமையில் இன்று (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) சிறப்புரை நிகழ்த்தியதுடன் மாவடிப்பள்ளி ஸஹ்தி அரபுக்கல்லூரி அதிபர் யூ.எல்.எம். முபாரக் துஆ பிராத்தனை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அல்- அமானா நற்பணிமன்ற முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று ஏழு புதிய வைத்தியர்கள் தங்களது கடமைகளை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :