எங்கள் மாமா - ஜுனைதா ஷெரீப்




எங்கள் மாமா - ஜுனைதா ஷெரீப்
+++++
Mohamed Nizous


மாமா என்ற
மா மா மனிதர்
மரணித்து விட்டார்


எட்டு தசாப்தங்கள்
எங்கள் குடும்பத்தில்
ஒட்டி உறவாடி
ஒளி தந்த உறவு
விட்டுப் பிரிந்து
வேறு திசை சென்றது
விழிகளில் நீர் பரவ


ஆலமரமாய் நின்று
அரவணைத்த மாமா
ஏலாத விடயங்களில்
எமக்குக் கை கொடுத்தவர்
நாலு பேர் மதிக்க
நாம் வாழ உதவியவர்
காலமாகிப் போனார்
கண்களில் நீர் பனிக்க


உம்மாவின் தம்பியாய்
உரிமையுடன் அதட்டியவர்
சும்மா நகைச்சுவையாய்
சுவையாகப் பேசியவர்
எம் குடும்பத் தலைவர்
இளகிய மனம் கொண்டவர்
தம் வாழ்வை முடித்து
தனியாக உறங்குகிறார்


அரச சேவையில்
அதி உச்சம் கண்டவர்
பரிசு விருதுகளை
பல தடவை கண்டவர்
பெரும் சேவை செய்தவர்
பிறருக்கு உதவியவர்
ஒரு சிறந்த மனிதர்
உறங்கி விட்டார் நிரந்தரமாய்


நாடகங்கள் எழுதிய
நாடறிந்த மனிதர்
ஊடகங்கள் ஊடே
உள்ளத்தில் வாழ்ந்தவர்
மூடக் கொள்கைகளை
முழுநாளும் வெறுத்தவர்
மூடி விட்டார் கண்ணை
முட்டுகிறது கண்ணீர்


என் எழுத்தின் தவறை
ஏசித் திருத்தியவர்
உன் கருத்துப் பிழை என்று
உரிமையாய்த் திட்டியவர்
தன் கவலை சொல்லி
சின்னவர் போல் அழுதவர்
பொன்வாழ்வை முடித்து
பூமியில் அடங்கி விட்டார்


சாமத்தில் துஆவில்
சரசரண்ணு கண்ணீர் வர
கார் மாமா கபுறுக்காய்
கவலையில் அழுகிறோம்
யாமந்த நல்லவரை
இனியெங்கு காண்போம்
யா அள்ளாஹ் கபுறை
இனியதாய் ஆக்கி வைப்பாய்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :