சூழ்நிலைப்பகுப்பாய்வுக்காகச் சென்ற மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு பெருவரவேற்பு



வி.ரி.சகாதேவராஜா-
திருக்கோவில் வலயத்திற்கு க.பொ.த.சா.தர பரீட்சைக்குத்தோற்றவிருக்கின்ற மாணவர்கள் தொடர்பான சூழ்நிலைப்பகுப்பாய்வொன்றை மேற்கொள்ள மாகாண கல்விஅதிகாரிகள் சகிதம் விஜயம்செய்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு பெருவரவேற்பும் கௌரவமும் அளிக்கப்பட்டது.

கிழக்குமாகாணத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைஅடைவுமட்டத்தினை அதிகரிக்கும்பொருட்டு பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் ,அதன் ஓரங்கமாக வலயரீதியான சூழ்நிலைப்பகுப்பாய்வொன்றை மேற்கொள்ள கிழக்குமாகாண கல்வி உயர்கல்வி அதிகாரிகள் குழாத்தினர் திருக்கோவில் வலயத்திற்கு நேரடியாக விஜயம்செய்திருந்தனர்..

அவ்வமயம் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் ,தற்போதய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணியின் கல்விச் சேவையினை பாராட்டி திருக்கோவில் வலயக் கல்வி அதிகாரிகள் பெருவரவேற்பையளித்து பொன்னாடை போர்த்தி கௌரவமளித்துள்ளனர்.

இந்நிகழ்வு, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரனின் தலைமையில் நேற்றுமுன்தினம்(28) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் கௌரவிப்பு விழாவில், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணிக்கு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு ,வலயக் கல்வி அலுவலகத்தில் அம்மணியின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்திகள் தொடர்பாக நன்றிகள் தெரிவித்து விசேட உரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் பொன்னாடை போர்த்தப்பட்டு ,நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஏற்புரையாற்றினார். அதன்பின்னர் சூழ்நிலைப்பகுப்பாய்வு கலந்தரையாடல் நடைபெற்றது.. கடந்த க.பொ.த. சா.தர பரீட்சையில் திருக்கோவில் வலயம் காட்டிய சாதனையை மாகாணப்பணிப்பாளர் வியந்து பாராட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :