இந் நிகழ்வில் பாடசாலையில் மாணவர்களது ஆக்கத்திறனையும் இலக்கியத்தையும் வளர்க்கும் முகமாகவும் மாணவர்களை சுயமாக நூல்களை எழுத ஊக்குவிக்கும் முகமாகவும் அதனை பிரசுரிக்கவும் மாணவர்களுக்கு வழியமைத்துக் கொடுக்கப்படுகின்றது. இவ் வைபவத்தில் மாணவர்களது கலை, இலக்கியம் மற்றும் சிறுகதைகள் அடங்கிய 12 நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டவர்; ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டு மாணவர்களது 12 நூல்களின் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்.
இவ் வைபவத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் ரசீன் ஹசன், உப அதிபர் திருமதி ஹிஜாசி மொஹிதீன், பகுதித் தலைவி சீனாஸ் பதூர்டீன், உப அதிபர் ஏ.எம்.மிஹ்லார். ஆசிரிய ஆசிரியர்களும்; பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஏனைய நிகழ்வுகளின் படங்களையும் காணலாம். (இந் நிகழ்வு சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது)
0 comments :
Post a Comment