கிழக்கு மாகாண ஆளுநராக மௌலவி முபாரக் அப்துல் மஜீத்?



எம் எஸ் எம் ஸப்வான்-
கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில்
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;
2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச அரசோடு தொடர்ந்தும் இணைந்திருக்கும் ஒரே முஸ்லிம் கட்சி முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையிலான கட்சி என்றும் அனைத்து சவால்களின் பொழுதும் அரசுக்கு உறுதுணையாக அவர் செயற்பட்டவர் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு மிகவும் தகுதி தகுதியானவர் என்பதால் அவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கா.மு. மழ்ஹர்தீன் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இனவாத கெடுபிடிகளால் பதவியை ராஜினாமா செய்த கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பெயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் அவர்களின் பெயரும் இப்பதவிக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :