திருகோணமலை மாவட்டத்தில் மெட்ரோ லீடர் பத்திரிகையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கிண்ணியா பிரதேசத்தில் (3) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான ஏ.கே.மஹ்ரூஸ்,கிண்ணியா நகர சபை உப தவிசாளர் ஐ.சப்ரின் முகமட், நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர்த் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளருமான.எம்.எம்.மஹ்தி,முன்னாள் ஜோர்டான் தூதுவர் ஏ.எல்.எம்.லாபீர்,கிண்ணியா நகர சபை முன்னாள் தவிசாளர் ஹில்மி மஹரூப் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு பத்திரிகைகளை வழங்கி அறிமுகப்படுத்தி வைத்தனர்.
மெட்ரோ லீடர் பத்திரிகையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றியாத்.ஏ.மஜீத்,பிரதம ஆசிரியர் ஏ.எஸ்.எம். முஜாகித்,விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் எம்.எம்.ஜபீர்,சந்தைப் படுத்தல் முகாமையாளர் எம்.பி.எம்.றின்சான் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment