சாய்ந்தமருது பிரதேசத்துக்கான புதிய திடீர் மரண விசாரணை அதிகாரியாக எ. எச் அல் ஜவாஹிர் நியமனம்..!



கல்முனை நிருபர்-
ம்பாரை மாவட்டம் மருதமுனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட எ. எச்.அல் ஜவாஹிர் அவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரியாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

14 வருட கால மொழிபெயர்ப்பாளர் அனுபவமும், அகில இலங்கை சமாதான நீதவானாக சுமார் 12 வருட காலம் சேவையாற்றி வருகிறார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவரான இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் டிப்ளோமோ ஆங்கிலம் கல்வி நெறியினையும் ,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா மொழிபெயர்ப்பு கற்கை நெறியினை பூர்த்தி செய்து முடித்ததுடன் இவர் ஒரு ஆங்கில மொழி கற்பிக்கும்
ஆசிரியராகவும் உள்ளார்.
அத்துடன் பொது மக்கள் நலன் சார் பல சமுக சேவையினை மேற்கொண்டு வரும் இவர் மர்ஹூம் எம்.எம்.அப்துல் ஹமீத், ஏ.ஆர்.உம்மு சுறையா தம்பதிகளின் நான்காவது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :