முதலீட்டாளர்களை கொண்டு வர முடியாது என்று எதிர்க்கட்சி கூறியது ஆனால் இப்போது முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். சில வாரங்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

டமேல் மாகாண பாரிய கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மககித்துல நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றம் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கடந்த 2021-10-12 ஆம் திகதி பொல்பிதிகம இருதெனிய மககிதுல பிரதேசத்திற்கு மேற்பார்வை விஐயம் மேற்கொண்டார்கள்.
மககிதுல நீர்த்தேக்க நிர்மாணிப் பணிகள் நடைபெறும் விதம் குறித்தும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையில் இதன் போது பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நீர்த்ததேக்க நிர்மாணப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக ஏனைய அரச நிறுவனங்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அமைச்சரின் தலையீட்டினால் தீர்க்கப்பட்டது.
தற்பொழுத அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்ததோடு துரிதமாக அதனை அதிகரித்து நிர்மாணப்பணிகளின் முன்னேற்றத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வருமாறு திட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த மேற்பார்வை விஐயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் .
ஒப்பந்தங்கள் இருந்தால் அவற்றில் கையெழுத்திடப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் வரும் போது ஒப்பந்தங்களில் கைச்சாத்திடாமல் இருக்க முடியாது. இன்று அல்லது நாளை கைச்சாத்திடுவதாக அர்த்தம் இல்லை. ஒரு முதலீட்டாளர் வரும் போது விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முடிக்க நாட்டின் நிர்வாகத்துக்கு திறமை இருக்க வேண்டும் . அது அமெரிக்க முதலீட்டாளர்களா சீன முதலீட்டாளர்களா இந்திய முதலீட்டாளர்களா ஜெர்மன் முதலீட்டாளர் அல்லது பிரிட்டிஷ் முதலீட்டாளர் என்று பிரச்சினை கிடையாது . முதலீட்டாளர்களை கொண்டு வர முடியாது என்று எதிர்க்கட்சி கூறியது. இப்போது முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். எனவே இந்த கோவிட் தொற்றுநோய் இருக்கும் நேரத்தில் முதலீட்டாளர்கள் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைய வீண்டும் .
எரிவாயு விலை உயர்ந்துள்ளது எரிபொருள் விலை உயரும் அறிகுறிகள் இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இவை அனைத்தும் தற்காலிகமான பிரச்சினைகள். இது ஒரு தற்காலிக நெருக்கடி நிலையாகும் . கோவிட் தொற்றுநோயினால் தான் இந்த நெருக்கடிகள் வந்தன .இந்த அனைத்தும் சில வாரங்களில் குறைந்துவிடும். பொறுமையாக இருக்குமாறு மக்களிடம் கோருகிறோம். சில வாரங்களில் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
வடமேல் மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் 88.96 நீளமுள்ள காளவாய் மற்றும் 25 உயரமுள்ள வாவிச் சுவர் உள்ளடங்கிய மகாகிருல மற்றும் மகாகிதுல நீர்த்தேக்கங்க இரண்டு குறுகிய தூரமுள்ள இரு சுரங்கப் பாதைகள் ஊடாக கலேவெலஇ பொல்பித்திகமஇ மஹவ மற்றும் எஹெடு வெவ பிரதேச செயலகங்களை அண்டியதாக உள்ள 7 நீர்பாசனங்கள் மற்றும் 326 கிராமிய வாவிகளுக்கு இரு போகங்களிலும் பயிர் செய்கைக்காக 2024 ஆம் ஆண்டாகும் போது வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ. 51இ729 மில்லியன் செலவிடப்படும் .
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 40இ000 குடும்பங்கள் பயனடையும் . இந்த திட்டம் சிறு மற்றும் பெரும் போகங்களில் 12000 ஹெக்டெயாருக்கு மேல் பயிர் செய்கை செய்ய உதவும். இது வடமேல் மாகாணத்தில் காணப்படும் கடுமையான சிறுநீரக நோய்க்கு பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் .
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னஇ குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :