திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன.

தினமும் மாலை வேளையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு,வீதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுவதோடு சில வீதிகளில் போக்குவரத்தும் செய்ய முடியாமலுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு,வான்எல,ஜயந்திபுர மற்றும் பேராற்றுவெளி,தம்பலாகாமம்,முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளிலும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நீண்ட வெளியிலுடனான கால நிலையின் பின்னர் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
வடிகாண்களிலும் வெள்ள நீர் வடிந்து ஓடுவதோடு சில குடிசை வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :