சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக அம்சா நியமனம்



அஸ்ரப் ஏ சமத்-
வெளிநாட்டுச் சேவை மற்றும் பல்வேறு நாடுகளில் துாதுவா் உயா் ஸ்தாணிகராக பல நாடுகளில் கடமையாற்றி 25 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு துாதுவா் சேவையில் சேவையாற்றிய பக்கீா் மொஹிதீனை அம்சாவை இம்முறையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவா்களினால் சவுதி அரேபியாவுக்கு துாதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். மிக விரைவில் அவா் சவுதியில் அரேபியாவுக்குச் சென்று அங்கு தமது கடமைகளை பொறுப்பேற்கச் செல்ல உள்ளாா்.

இவா் இலங்கை வெளிநாட்டு அமைச்சில் மேலதிகச் செயலாளா் (பொருளாதாரம் ) துருக்கி நாட்டின் துாதுவா், ஜோகியா, உக்கிரைன், பெல்ஜியம், போ்லின் லண்டன் பதில் துாதுவா் , இந்தியா சென்னையில் பதில் உயா் ஸ்தாணிகா் போன்ற பல்வேறு நாடுகளில் வெளிநாட்டுதுறை சாா்ந்த சேவைகளை திறம்பட செயலாற்றியவா்.

சிரேஸ்ட ஆங்கில ஊடகவியலாளரும் அரப் நியுஸ் டெயிலி நியுஸ் செய்தியாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான மொஹமட் ரசூல்டீன் அவா்களின் ஏற்பாட்டில் துாதுவா் அம்சாவுக்கு தேனீா் விருந்துபசாரமும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வு வொன்று கடந் ஞயிற்றுக் கிழமை கொள்ளுப்பிட்டி மந்திரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளாா் சபருள்ளாக் கான், பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா் தாரிக் எம்டி இஸ்லாம், துருக்கி நாட்டின் துாதுவா் ஆர் டிமிட்சேக்ரக்குழு, பாக்கிஸ்தான் நாட்டின் துாதுவா் அதிகாரி திரு ஹான், குலோபல் ரவல்ஸ் நிறுவனத்தின் தலைலா் றிஸ்மி றியாஸ் வை.எம்.எம். ஏ தலைவா் பெண்கள் பிரிவு தலைவி, மற்றும் அப்சல் மரைக்காா், டெயிலிநியுஸ் செய்தி ஆசிரியா் சமிந்த வும கலந்து சிறப்பித்தனா்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :