சஜித்அணி வைத்தியசாலைகளின் தேவைகள் தொடர்பாக ஆராய்வு!



வி.ரி.சகாதேவராஜா-
திர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடைய தலைவருமான சஜித் பிரேமதாச வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை வைத்தியசாலைகளுக்கான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்குவது தொடர்பாக அவரது அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் வைத்தியசாலைகளுக்கு விஜயம்செய்தார்.

அவர் கல்முனை ஆதாரவைத்தியசாலை காரைதீவு பிரதேச வைத்தியசாலை திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு முதற்கட்டமாக நேற்றுமுன்தினம் விஜயம் செய்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் உடைய வைத்தியஅததியட்சகர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்புவைத்தியஅதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்தியஅததியட்சகர் டாக்டர் ஆகியோரை சந்தித்து வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அங்கு இணைப்பாளர் வினோகாந்த் கருத்துரைக்கையில்:
அவர் வெகுவரைவில் குறித்த வைத்தியசாலைகளுக்கு விஜயம்செய்து இவர்களால் விடுத்த தேவைகளை நிவர்த்திசெய்யவிருக்கிறா.

நாட்டில் இதுவரை இருபத்தி எட்டு வைத்தியசாலைகளுக்கு 8கோடி ருபா (806 லட்சம் ரூபாய்) செலவிலான மருத்துவ உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார் .கடந்தவாரம் பாணமை மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ந்தும் எனது வேண்டுகோளுக்கிணங்க அம்பாறையில் காணப்படும் தமிழ் பிரதேசங்கள் ஆகிய திருக்கோவில், ஆலையடிவேம்பு ,மல்வத்தை ,நாவிதன்வெளி ,மத்தியமுகாம், காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் காணப்படக்கூடிய வைத்தியசாலைகளுக்கு இது மாதிரியான அத்தியாவசிய வைத்திய உபகரணங்களை எதிர்வரும் நாட்களில் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
அதற்கான முன்னாயத்தங்களை ஆரம்பிக்கும்படி சஜித் பிரேமதாச என்னிடம் கோரியதற்கமைவாக தற்சமயம் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்துவருகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய தலைவருமாகிய சஜித் பிரேமதாச இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் குறிப்பாக இன்னல் காலங்களிலே அவர்களுக்கு கைகொடுக்கும் ஒரு சிறந்த தலைவர் என்பது அவருடைய சேவைகளிலிருந்து கண்டிப்பாக மக்களுக்கு புரிகிறது.என்றார்.
இச்சந்தர்ப்பத்திலே சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சமுகமளித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :