இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல்அந்தஸ்தை அளித்தபெரும்தலைவர் அஷ்ரப்



காரைதீவு பிரதேசசபை நினைவுப்பிரேரணையில் மு.கா.மூத்தஉறுப்பினர் இஸ்மாயில்
வி.ரி.சகாதேவராஜா-
லங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அந்தஸ்தை அளித்த தனிப்பெரும் தேசியத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள்.அதேவேளை தமிழ்முஸ்லிம் உறவை கட்டியெழுப்பிய மாமனிதர் அவர். அவரது 21ஆவது ஆண்டுமரணித்த நிறைவை இந்த சபையில் நினைவுகூருவதில் பெருமையடைகிறேன்.

இவ்வாறு மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் 21ஆவதுவருட நினைவு அஞ்சலிப் பிரேரணையை முன்மொழிந்துபேசிய காரைதீவு பிரதேசசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேசசபையின் 43ஆவது மாதாந்த அமர்வு சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
வழமைக்கு மாறாக காலை 9.30 மணிமுதல் மாலை 5மணிவரை இவ் அமர்வு ஊடகவியலாளர்களின்றி நடைபெற்றது.

அங்கு உறுப்பினர் இஸ்மாயில் மேலும் பேசுகையில்:
1980இல் காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனற் ஆலவிருட்சம் பெருந்தலைவர் அஸ்ரப்பினால் படிப்படியாக சரியாக உரம்போட்டு வளத்தெடுக்கப்பட்டது. 1988இல் பல சவால்களுக்கு மத்தியில் அது அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டது.
அந்தஆண்டில்தான் தமழ்க்கட்சிகளான ரெலோ ,புளொட் ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகளும் பதிவுசெய்யப்பட்டன.
1988 தேர்தலில் வடக்கு கிழக்குவெளியெ இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் 12உறுப்பினர்களைப்பெற்று தேசியஅரசியலில் தடம்பதித்தது. 1994இல் மேல்மாணமுதலமைச்சராகவிருந்த சந்திரிகா அம்மையாரை ஜனாதிபதியாக்கிய பெருமையும் தலைவரையே சாரும். அதனூடாக பல அமைச்சுப்பொறுக்களை வகித்து தமிழர்முஸ்லிம்களுக்கு அளப்பரியசேவையாற்றினார்.

தமிழ் முஸ்லிம் உறவை வளர்ப்பதில் பாரிய பங்காற்றிய தலைவர் அஷ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் துறைமுகம் போன்றவற்றைநிறுவி அனைத்துஇனங்களும் பயன்படக்கூடியவகையில் சேவையாற்றினார்.

தவிசாளர் உரை
தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்:
கிழக்கில் தோன்றிய தனிப்பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களையிட்ட பதிவுகளை இச்சபையில் நினைவுகூருவதையிட்டு மகிழ்வடைகிறேன். தமிழ்த்தலைவர் தந்தை செல்வா வழியில்வந்த முஸ்லிம்களின் தந்தை அஸ்ரப் சகல இனங்களையும் அரவணைத்து பாரிய அபிவிருத்தியை செய்தவர்.

காரைதீவில் இன்று பலர் துறைமுகத்தில் பணியாற்றுவதற்கு மூலகாரணம் அவர்தான். அவரோடு இறுதிவரை மரணித்திலும் பங்கேற்ற கதிராமத்தம்பியூடாகவும் பல சேவைகளை செய்தவர் அவர்.புனர்வாழ்வு அமைச்சராகஇருந்து செய்த சேவைகள் காலத்தினால் மறக்கப்படமுடியாதவை.

அவர் இனமதபேதமற்ற அபிவிருத்திகளை செய்தவர். இனங்களை ஜக்கியப்படுத்த நுஆ போன்ற கட்சிகளை ஸ்தாபித்து அளப்பரியசேவையையும் செய்தவர்.

காரைதீவில் மணிமண்டபத்தை பூர்த்திச் செய்தவரும் அவரே. சண்முகாவில் கலலாயம் அமைத்தவரும் அவரே.
அவரது மரணத்தின்பின்னால் இனவாத அரசியல் தலைதூக்கியுள்ளது.
தலைவர் அஸ்ரப் கதிராமத்தம்பி ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

மற்றுமொரு மு.கா.உறுப்பினர் எம்.என்.எம். றனீஸ் உரையாற்றுகையில்:

கிழக்குமண் பெற்றெடுத்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் வெறும் அரசியல்தலைவன் மட்டுல்ல பெரும் திறமைமிகு சட்டத்தரணியாவார். அவர் பேசி வழக்காடி பலருக்கு நீதியைப்பெற்றுக்கொடுத்திருக்கிறார். சமுகத்திற்காக வாதாடி பல அளப்பரிய மகத்தான சேவைகளை அபிவிருத்திகளை செய்த அந்த மாமனிதருக்கு பின்னால் அவர்போன்று தலைவர்களைக்காணமுடியவில்லை.

ஆனால் அவரது மரணம் இடம்பெற்று 21வருடங்கள் ஆகின்றன. இன்னமும் அவரது மரணத்திற்கான மர்மம் துலங்கவில்லை. அதற்கான நீதி இன்னும் பெறப்படவில்லை. அது வேண்டும்.

சபையில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.எஸ்.ஜலீல் எ.ஆர்.எம்.பஸ்மீர் ஆகியோரும் நினைவுரையாற்றினர்.

இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :