பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு



எம்.ஜே.எம்.சஜீத்-
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வு காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் நிலாந்த விஜேசிங்க தலைமையில் நேற்று (20) கெளரவ காணி அமைச்சர் எஸ். ஏம் . சந்ரசேன அவர்களால் உத்தியோகம் பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கையின் அடிப்படையில் 150 காணி உறுதி பத்திரங்கள் மூவின மக்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ நிமல் சிரிபால டி சில்வா, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ டிலான் பெரேரா, கிராமிய பாடசாலை வீதி உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ தேனுக விதான கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த குமார், கௌரவ சுதர்சன தெனிபிடிய மற்றும் பதுளை மாவட்ட காணி சீர்திருத்த அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் குமார ஹதரசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :