டெங்கை ஒழிக்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் களத்தில் !



மாளிகைக்காடு நிருபர்-
காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்ளும் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் பொருட்டு தொடர்ச்சியாக கொள்கலன் சேகரிப்பு நிகழ்வுகள் இன்று மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்த களப்பணியில் மக்கள் மத்தில் பேசிய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர், நுளம்பு பெருகுவதனை குறைக்கவும், எங்கள் பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும், தினமும் காலை குறைந்தது 10 நிமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழலைப் நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுமக்களாகிய அனைவரும் எமது பிரதேசத்திலிருந்து டெங்கை ஒழிக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :