கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்காகவும், கொரோனா நோயில் இருந்து உலக மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் இமாம் ஜஃபர் ஸாதிக் பணிமனையின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், விஷேட பிரார்த்தனையும் மற்றும் சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி நாவலடியில் இடம்பெற்றது.
கல்குடா இமாம் ஜஃபர் ஸாதிக் பணிமனையின் ஏற்பாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களுக்கான ஆத்மா சாந்தி வேண்டியும், கொரோனா நோயில் இருந்து உலக மக்களை பாதுகாக்கும் நோக்கிலும், ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், சுகாதார துறையினரின் ஆசி வேண்டியும் விஷேட பிரார்த்தனைகளை இமாம் ஜஃபர் ஸாதிக் பணிமனையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எல்.ரி.ஏ.ஹலீம் நிகழ்த்தினார்.
இதன்போது கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், விஷேட பிரார்த்தனை நிகழ்வில் சுகாதார விதிமுறைகளை பேணி மக்கள் கலந்து கொண்டதுடன், கலந்து கொண்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment