வெருகல் பிரதேச செயலக ஏற்பாட்டில் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனமும் இணைந்து கச்சான் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கச்சான் விதைகள் வழங்கும் நிகழ்வு (01) வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச். கணி தலைமையில் வெருகல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தினை மேலும் பலப்படுத்தி உள்ளுர் கச்சான் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் 30 விவசாயிகளுக்கு அரை ஏக்கர் காணியில் கச்சான் செய்கையை மேற்கொள்வதற்கான கச்சான் விதைகள் மற்றும் சேதனைப் பசளைகள் அடக்கிய தொகுதிகள் மலேசியா தமிழர் பேரவையின் நிதி அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டது.
கோவிட்-19 தாக்கத்தினால் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு உதவுவி தன்னிறைவான உணவுத் தேவையை புர்த்தி செய்து கொள்வதற்கு இது போன்ற உதவிகள் நன்மையளிக்கும் வகையில் வன்னி ஹோப் நிறுவனத்தினுாடாக திருகோணமலை மக்கள் சேவை மன்றம் பல முன்னெடுப்புகள் அமுல்படுத்தி வருகின்றது.
இந்த நிகழ்வில் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ், அதன் உத்தியோகத்தர்களான கே. தவசீலன், ஆர் கணேஷமூர்த்தி, எம். வசீம், வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment