திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக்கல்லூரி. 125வது வருட நினைவாக 1992ம் வருடம் சாதாரணதரமும், 1995ம் வருடம் உயர்தரமும் கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து 3 திறன் பலகைகளை Smart Board கல்லூரிக்கு ஏற்படுத்தி தந்துள்ளனர்.
மாணவர்களின் தேவை கருதி பல்ஊடக அறை, விஞ்ஞான பிரிவு, இடைநிலை பிரிவு அறகளில் இவை பொருத்தப்பட்டுள்ளது.
இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (.24 ) காலை நடைபெற்றது.
முந்நாள் ஓய்வுநிலை அதிபர்களான சி.தண்டாயுதபாணி, மா.இராசரெத்தினம், இ.புவனேந்திரன் ஆகியோரைக்கொண்டு பல்லூடக அறையிலும், ஓய்வுநிலை
முந்நாள் ஆசிரியர்களான த.சச்சிதானந்தராஜா, ந.விக்னேஸ்வரன், நா.ஜெகன்மோகன் ஆகியோரைக் கொண்டு விஞ்ஞான பிரிவிலும், முந்நாள் ஓய்வுநிலை ஆசிரியைகளான திருமதி அ.கணேசலிங்கம், திருமதி பா.தர்மராஜா,திருமதி க.இராஜகோண் ஆகியோரைக் கொண்டு இடைநிலை பிரிவிலும் இவை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment