நண்பர் றஸ்பாஸுக்கு எனது ஆத்மாத்தமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை பிறந்த சாய்ந்தமருது மண்ணுக்கும், விசேடமாக யஹியாகான் பௌண்டேசனுக்கும் கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன் என்று யஹியாகான் பௌண்டேசனின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சி. யஹியாகான் விடுத்துள்ள ஊடகக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்பட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தரம் 1 (ICC Level 1 Coach) பரீட்சையில் சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மட் அலியார் முஹம்மட் றஸ்பாஸ் சித்தியடைந்திருந்தார்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடத்தப்பட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் (ICC Level 1 Coach) தரம் 1 பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து 24 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் பங்குபற்றிய இவர் இப் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்த முதலாவது நபராகும்.
இதன் மூலம் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்திற்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment