ஆரோக்கியமான கர்ப்பகாலம் - பகுதி 2



Dating Scan / கர்ப்பகாலத்தை கணிக்கும் பரிசோதனை

சராசரியான கர்ப்பகாலம் 266 நாட்களாகும்.
 
சீராக 28 நாட்களுக்கொருதடவை மாதவிடாய் வரும் பெண்களில் கடைசியாக மாதவிடாய் ஆரம்பித்த தினத்தினத்திலிருந்து 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் சேர்த்து குழந்தை பிரசவிக்கும் தினம் கணிக்கப்படும்.
 
மாதவிடாய் ஏற்பட்டு 14 வது நாள் கருமுட்டை வெளியானது என்று கருதியே அவ்வாறு கணிப்பு செய்யப்படும்.
 
நிறைமாதம் என்பது 37-42 வாரங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். இக்காலத்திற்கிடையில் குழந்தை பிரசவம் நடப்பது சிறந்தது.
 
எனினும் சிலரில் 37 வாரங்களுக்கு முன்னர் பிரசவம் நடக்கலாம். இதன்போது குழந்தையின் கருப்பையில் நடக்கவேண்டிய வளர்ச்சி முழுமையடையவில்லை என்பதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடுசெய்வதன் மூலம் குழந்தையில் ஏற்படக்கூடிய நோய்நிலைமைகளை தவிர்க்கலாம்.
 
அதேபோன்று குழந்தைபிரசவிக்காது நாட்பட்டு செல்லும் போது குழந்தையின் வளர்ச்சியிலும் , Placenta / குழந்தையின் மாக்கொடியின் தொழிற்பாட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் விளைவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பிரசவ வலியை தூண்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.

இதற்கு கர்ப்பகாலத்தை சரியாக கணித்தல் அத்தியாவசியமானது.குறிப்பாக மாதவிடாய் சீராக நடைபெறாத பெண்களில் கர்ப்பகாலத்தை மேற்கூறப்பட்ட முறையில் கணிக்க முடியாது. அதேவேளை மாதவிடாய் சீரான பெண்களிலும் கருமுட்டை வெளியாகும் நாள் சில தினங்களால் மாறுபடலாம்.

எனவே கர்ப்பகாலத்தை சரியாக கணிப்பதற்கு ஸ்கான் / scan பரிசோதனையை பயன்படுத்தலாம்.
இதற்காக செய்யும் scan பரிசோதனை dating scan எனப்படும். இதனை மாதவிடாய் தொடங்கிய தினத்திலிருந்து 11-14 வாரங்களுக்கிடையில் சரியாக பயிற்சிபெற்றவர் செய்யும் போது மிகத்துள்ளியமாக கணக்கிடலாம்.

Dating scan இக்காலத்திற்கு பின்னர் செய்யும் போது அதன் துள்ளியத்தன்மை படிப்படியாக குறைவடையும். எனவே சரியாக இக்காலப்பகுதியில் செய்வது சிறந்தது.
இப்பரிசோதனையின் போது மேலும் சில விடையங்களை குறிப்பாக அவதானிக்கலாம்.

1. குழந்தையில் சில குறைபாடுகளை முதலிலேயே அவதானிக்கலாம்
2. சில நிறமூர்த்தங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் (Genetic diseases ) குறிப்பாக Down Syndrome போன்ற நோய்நிலைமை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலிக்க பயன்படுத்தலாம்.
3. ஒன்றுக்கு மேற்பட்டகுழந்தைகள் இருப்பின் அவற்றின் சரியான எண்ணிக்கையையும் , அக்குழந்தைகள் ஒரே மாக்கொடியிலிருந்து போசாக்கை பெருகின்றதா இல்லாவிட்டால் வெவ்வேறாக காணப்படுகின்றதா என்பது. இதை அறிவது குழந்தைகளின் வளர்ச்சி, பிரசவம் என்பவற்றை திட்டமிடுவதற்கு அத்தியாவசியமாகும்.
Ctd…

Dr முஹம்மத் முஸ்தாக்
MBBS, MD Gyn/Obs, MRCOG, MSLCOG
பிரசவ மகளிர்நோய் விசேட வைத்தியநிபுணர்
தேசிய வைத்தியசாலை கண்டி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :