2021ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச கலாசார விழா நடாத்த தீர்மானம்



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் நடாத்தப் படவுள்ள கலாசார விழா இம்முறை சற்று வித்தியாசமான முறையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எமது பிரதேசத்தின் முன்னைய காலம் தொட்டு வழக்கிலிருந்த பாரம்பரிய கலைகள் தொடர்பான கலைகளை எமது பிரதேச மக்களிடமிருந்து வெளிக் கொண்டு வரும் முகமாகவும்,
அடுத்த சந்ததிக்கு இவ்வாறான கலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், இம்முறை கலாச்சார விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே தங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவில்
பாரம்பரிய கலைகளுடன் தொடர்புடைய கலைகளான

தாலாட்டுப் பாட்டு,ஒப்பாரி ,மீனவர் பாட்டு / தோணி இழுத்தல், கிராஅத் கவி ,.இஸ்லாமிய கீதம் ,சீனடி , வாள் வீச்சு,கோலாட்டம் இது போன்று ஏனைய கலைகளுடன் தொடர்பான கலைஞர்கள் இருப்பின் அவர்களின், பெயர், முகவரி, தேர்ச்சி பெற்ற கலைகள், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு விபரங்களை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.ஹில்மியிடம் கையளிக்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் கேட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :